Connect with us
anto copy

Cinema News

விஜய் ஆண்டனி வீட்டில் ஏற்கனவே நடந்த தற்கொலை சம்பவம்! – இதென்னய்யா பாவம் மனுஷன்!

Vijay Antony: தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இசையமைப்பாளராக  மக்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர் விஜய் ஆண்டனி. சுக்ரன் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி முதல் படத்திலேயே முத்திரை பதித்தார்.

அதிலிருந்து தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்த விஜய் ஆண்டனிக்கு காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நாக்கமுக்கா பாடல் மூலம் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அந்தப் பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவி விஜய் ஆண்டனி யார் என்பதை இந்த உலகுக்கு காட்டியது.

இதையும் படிங்க: உன் குடும்பத்தை நான் பாத்துக்குறேன்… நீ போ… ரஜினிகாந்தை தாங்கிய நண்பர்… செமல!

தொடர்ந்து இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி நான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. விஜய் ஆண்டனியால் நடிக்கக் கூட முடியுமா? என்றளவுக்கு அந்தப் படத்தில் சைலண்ட் கில்லராகவே நடித்திருப்பார்.

தொடர்ந்து பிச்சைக்காரன், சலீம், சைத்தான், கொலைகாரன், அண்ணாத்துரை போன்ற பல படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது ஒரு நல்ல நடிகராக மட்டுமில்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் சினிமாத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: பாட்ஷா படத்தில் இது சரியில்லை… போல்டா சொன்ன பிரபல இயக்குனர்… ஆச்சரியப்பட்ட ரஜினிகாந்த்!

சமீபத்தில் தான் ஒரு படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவருடைய மகளான மீரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் தற்கொலை சம்பவம் குறித்து விஜய் ஆண்டனி முன்பு பேசிய ஒரு வீடியோ இன்று வைரலாகி வருகின்றது. அதில் யாரும் தற்கொலை செய்யக் கூடாது என்றும் அதுவும் வேறொருவர் வாங்கிய கடனுக்காக தற்கொலை செய்து கொள்ளவே கூடாது என்றும் சின்னப்பிள்ளைகளை பார்க்கும் போது மனசு அதிகளவில் வலிக்கிறது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: அட்வான்ஸ் கொடுத்தும் செல்ஃப் எடுக்காத கமல் திரைப்படம்! அசால்ட்டா இறங்கி துவம்சம் செய்த ரேவதி

அதுமட்டுமில்லாமல் விஜய் ஆண்டனிக்கு 7 வயதாக இருக்கும் போது அவருடைய தந்தையும் தற்கொலை செய்துகொண்டாராம். அப்போது விஜய் ஆண்டனிக்கு ஒரு தங்கையும் இருந்தாராம். அப்பா தற்கொலை செய்து கொண்ட பிறகு அம்மாவின் கவனிப்பிலேயே விஜய் ஆண்டனியும் அவரது தங்கையும் வளர்ந்தார்களாம்.

ஆனால் ஏன் அவரது அப்பா தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணத்தை கூற மறுத்துவிட்டார். மேலும் என் அம்மா மிகவும் கஷ்டப்பட்டுத்தான் எங்களை வளர்த்தார்கள் என்றும் அந்தளவுக்கு வலிகளை நான் அனுபவித்து விட்டேன் என்றும் கூறினார். அதுமட்டுமில்லாமல் நான் ஏன் அமைதியா இருக்கிறேன், ஏன் அதிகமாக பேசமாட்டேன் என்றால்  நான் நிறைய பார்த்து விட்டேன் என் வாழ்க்கையில் என்றும் பேசத்தெரியாமல் எல்லாம் இல்லை. நானும் பேசுவேன். ஆனால் வேண்டாம் என ஒதுங்கி இருக்கிறேன் என்று விஜய் ஆண்டனி அந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top