மறுநாள் பதவியேற்பு விழா!. ஆனால் முதல் நாள் எம்ஜிஆர் எங்கு இருந்தார் தெரியுமா?..
எம்ஜிஆர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இந்தப் படம் 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது ஒரு வரலாற்று நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் எம்ஜிஆருடன் பி.எஸ்.வீரப்பா, லதா போன்றோரும் நடித்திருந்தனர்.
எம்ஜிஆர் இந்த படத்தை இயக்கி நடித்தார்.மணி ஐயர் இந்த படத்தை தயாரித்தார். ஆனால் இந்த படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் 1974 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. அப்போது இந்தப் படத்தை இயக்குவதாக பந்த்லு தெரிவித்திருந்தார். ஆனால் அவர் திடீரென காலமாக படத்தை இயக்கும் பொறுப்பு எம்ஜிஆரிடம் சென்றது.
படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது சில மாதங்கள் தமிழ் நாட்டின் முதல்வராக பொறுப்பு வகித்திருந்தார் எம்ஜிஆர். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து இன்னும் இரண்டு தினங்கள் மட்டும் சில பேட்ச் வேலைகளும் டப்பிங் வேலைகளும் மட்டும் இருந்திருக்கின்றன. ஆகவே மணி ஐயர் எப்படியாவது இந்த வேலைகளை முடித்துக் கொடுத்து விடுங்கள் என்று எம்ஜிஆரிடம் கூறியிருக்கின்றனர்.
ஏனெனில் அந்த இரண்டு தினங்களுக்கு பிறகு ராஜாஜி ஹாலில் எம்ஜிஆரின் பதவியேற்பு விழாவாம். ஆனால் எம்ஜிஆர் அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தியிடம் நான் ஸ்பெஷல் அனுமதி வாங்கி அதன் பிறகு முடித்துக் கொடுத்து விடுகிறேன் என்றும் முதலைமைச்சருக்கு விடுமுறை இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால் அது சட்ட பிரச்சினையாக மாறிவிடும். அதனால் சீக்கிரம் முடித்து விட்டு போங்கள் என்று மணிஐயர் கூற முதல் நாள் பேட்ச் வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு மறு நாள் இரவிலிருந்து அடுத்த நாள் காலை 5 மணி வரைக்கும் டப்பிங் எல்லாம் பேசி முடித்து விட்டு நேராக வீட்டிற்கு சென்று குளித்து விட்டு ராஜாஜி ஹாலிற்கு பதவியேற்க சென்று விட்டாராம்,
டப்பிங் முடிந்ததும் மணி ஐயர் எம்ஜிஆரிடம் கேட்டாராம் ‘எங்களால உங்களுக்கு தூக்கம் போச்சு’ என்று. ஆனால் அதற்கு எம்ஜிஆர் ‘அதெல்லாம் ஒன்றுமில்லை மணி, இனிமேல் தான் முழிச்சிக்க போறேன், இப்ப வரை தூங்கிட்டு தான் இருந்தேன், இனிமேல் தான் முழிச்சிக்க போறேன்’ என்று தன் அரசியல் அறிவோடு பதில் கூறிவிட்டு பறந்துபோனாராம். இந்த சுவாரஸ்ய தகவலை மணி ஐயரின் மகனும் தயாரிப்பாளருமான கே.எஸ்.ஸ்ரீநிவாசன் கூறினார்.
இதையும் படிங்க : ஒரு படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்களா?.. விளம்பரத்தை பார்த்ததும் பதறிய எம்.எஸ்.வி..