Cinema History
எம்.ஜி.ஆர் சுடப்பட்டதுக்கு காரணமா இருந்த நடிகை..! இப்படியும் நடந்துச்சா…
தமிழ் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். கமர்சியல் நடிகர்களை பொறுத்தவரை அதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதற்கு முன்பு கமர்சியலான ஹீரோ நடிகர் யார் இருந்தார் என்று பலருக்கும் தெரியாது.
அந்த அளவிற்கு வரிசையாக புரட்சிகரமான படங்களாக நடித்து மக்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவரை புரட்சித்தலைவர் என்று மக்கள் அழைக்கின்றனர்.
எம்ஜிஆருக்கு சினிமாவில் இருந்த வரவேற்பு அவரை அரசியலில் பெரும் வெற்றியை பெறச் செய்தது. ஏனெனில் அப்பொழுது சினிமாவிலேயே எம்.ஜி.ஆரை பலரும் ரசித்தனர். எம்.ஜி.ஆர் மக்களுக்கு நல்லது செய்பவராகவும் தீமைக்கு எதிராக போராடுபவராகவும்தான் அதிகபட்சம் நடித்து வந்தார். அவரது பாடல்கள் கூட சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை உள்ளடக்கியதாகவே இருந்தன. எனவே மக்களும் எம்.ஜி.ஆர் மீது அதிக அன்பு கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ஒருநாள் நடிகர் எம்.ஆர் ராதாவால் தொண்டையில் சுடப்பட்டார் எம்.ஜி.ஆர். இந்த நிகழ்வு நடந்த பொழுது தமிழகமே அதிர்ச்சிக்குள்ளானது. இந்த சம்பவம் எதனால் நடந்தது என்பது குறித்து பலருக்கும் இதுவரை சரியான தகவல் தெரியாது. சமீபத்தில் இது குறித்து சமூக வலைதளங்களில் அரசல் புரசலான தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.
பின்னால் உள்ள சர்ச்சை:
அதாவது அந்த துப்பாக்கி சூடு நடந்ததற்கு சரோஜாதேவிதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 1957 இல் தொடங்கி 67 வரையிலும் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் இணைந்து பல படங்கள் நடித்தனர். அந்த 10 வருடங்களில் மட்டும் 25 படங்கள் அவர்கள் இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால் 1967இல்தான் இந்த துப்பாக்கி சூடு நடந்தது.
அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிப்பில் அரச கட்டளை படம் வெளியானது. அந்த படத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் சேர்ந்து நடிக்கவே இல்லை. அந்த அரச கட்டளை திரைப்படமும் இந்த துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பே படமாக்கப்பட்டது. ஆனால் தாமதமாக ரிலீசானது. எனவே சரோஜாதேவிக்கும் இந்த துப்பாக்கி சூட்டிற்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்று பேச்சுக்கள் இருக்கின்றன.