பொழைக்க வைச்சதும் அவர்தான்.. சாவுக்கு காரணமாக இருந்தவரும் அவர்தான்.. எம்ஜிஆரை பற்றி பிரபல நடிகர் கண்ணீர் மல்க பேட்டி..
எம்ஜிஆர் என்றால் உதவும் கரம், வள்ளல் கொடை, அன்புக்கரம், என நல்ல குணங்களுக்கு என்ன பெயர்கள் இருக்கின்றதோ அத்தனையும் ஒருங்கே ஒரே உருமாக இருக்கும் மனிதர் தான் நம் புரட்சித்தலைவர். இன்றளவும் இவர் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றது.
எத்தனை எத்தனை செயல்கள், எத்தனை எத்தனை புண்ணியங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். யாரைக் கேட்டாலும் எம்ஜிஆரா அந்தக் காலத்தில் நான் கஷ்டத்தில இருக்கும் போது என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அப்படி தகுதி பாராமல் உதவி என்று வந்தவர்களுக்கு தன்னால் இயன்ற அளவுக்கு என்ன வேண்டுமோ செய்திருக்கிறார் மக்கள் திலகம்.
இதையும் படிங்க : டூயட் சாங்ல அது இல்லாம எப்படிமா?.. ரம்பாவின் பிடிவாதத்தால் கடுப்பேறிய படக்குழு.. ஹீரோ அப்படிப்பட்டவர்!..
அதே போல் பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக இருந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் வல்லவர் தான் எம்ஜிஆர். இப்படி இவரால் பலனடைந்தவர்கள் ஏராளம். அந்த வகையில் தன் தந்தையின் உயிரைக் காப்பாற்றிய பெருவள்ளல் எம்ஜிஆர் என்று பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
நடிகர் பெஞ்சமின் ஏராளமான படங்களில் துணை நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்திருக்கிறார். வெற்றிக் கொடிகட்டு, பகவதி, சாமி, அன்பே சிவம், அருள், வசூல்ராஜா எம்பிபிஎஸ் என கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரின் தந்தைக்கு மருத்துவ உதவிக்காக போதிய பணமில்லாததால் அப்போது முதலைமைச்சராக இருந்த எம்ஜிஆரிடம் மனு ஒன்று கொடுத்தாராம்.
சிகிச்சைக்கு ஒரு லட்சம் தேவை என்ற நிலையில் மனு கொடுத்து 3 வது நாளில் 1. 50 லட்சம் தொகையை அனுப்பியிருக்கிறார். 1 லட்சம் சிகிச்சைக்காகவும் மீதி தொகை குடும்ப செலவுக்காகவும் கொடுத்தனுப்பியிருக்கிறார் எம்ஜிஆர். இதிலிருந்து மீண்ட பெஞ்சமின் தந்தை சில தினங்கள் உயிரோடு இருந்திருக்கிறார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க டிசம்பர் 24 ஆம் தேதி எம்ஜிஆர் மரணமடைந்தார் என்ற செய்தி இவர்கள் தீயாக பரவியிருக்கிறது. இதைக் கேட்ட அடுத்த நொடியிலேயே பெஞ்சமின் தந்தையும் இறந்து விட்டாராம். அந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது என் தந்தை மிகுந்த பற்றாக இருந்தார் என்று மேடையில் கண்ணீர் மல்க கூறினார்.