சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த மறக்க முடியாத படங்கள்
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவர் சிங்கீதம் சீனிவாசராவ். 95 வயதான அவர் நேற்று வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவர் சிங்கீதம் சீனிவாசராவ். 95 வயதான அவர் நேற்று வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், கதாசிரியர் என பன்முக திறமை கொண்ட இவர் தமிழில் ராஜ பார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், காதலா காதலா, மைக்கேல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இறுதியாக தெலுங்கில் சிங் கீதம் என்ற படத்தை இயக்கிருந்தார்.
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் பல நல்ல படஙகள் வெளி வந்திருந்தாலும் -மறக்க முடியாத சில படங்களை பற்றி இங்கே காண்போம்.
- ராஜ பார்வை
கமல்ஹாசனின் 100வது படமாக இப்படம் வெளி வந்தது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவி,சந்திர ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் அமாவாசய சந்துருடு எனும் பெயரில் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது. இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின. மிகச் சாதாரணமான ஒரு காதல் கதையை சிறப்பான முறையில் திரைக்கதையில் வடிவமைத்திருப்பார் சிங்கீதம் சினிவாசராவ்.
- பேசும் படம்
பேசும் படம் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். சிங்கீதம் சீனிவாசராவ் தயாரித்து இயக்கி வெளிவந்த இந்த படத்தில் கமல்ஹாசன், அமலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஒரு புதிய முயற்சியாக வசனம் எதுமே இல்லாமல் சொல்லபோனால் ஊமை படமாக இப்படம் எடுக்கப்பட்டது. இளையராஜா இப்படத்திற்கு காட்சிக்கு காட்சி தன் இசையால் பேச வைத்திருப்பார். கன்னடத்தில் இப்படம் புஸ்பக விமான என்ற பெர்யரில் டப் செய்யப்பட்டு வெளியானது.
- அபூர்வ சகோதரர்கள்
கமல்ஹாசன் தயாரித்து நடித்த இந்த படத்தில் 3 வேடங்களில் நடித்திருப்பார். குறிப்பாக அப்பு என்ற கேரக்டர் அந்த கால கட்டத்தில் பரபரப்பாகவும் அதே சமயம் பிரமிப்பாகவும் பார்க்கப்பட்டது. அந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய வசூலை இப்படம் குவித்தது.
- மைக்கேல் மதன காமராஜன்
கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்திருப்பார். முழுக்க முழுக்க கேமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்படிருந்தது. ஒரு காட்சியில் 4 கமல்ஹாசனும் ஒரே பிரேமில் இருப்பது போன்று அற்புதமாக எடுத்திருப்பார் சங்கீதம்.



