பொன்னியின் செல்வன் படத்தின் சிறந்த நடிகருக்கான விருது!..வாய்க்கொழுப்போடு தெனாவட்டும் ஜாஸ்தி தான் இவருக்கு?..
நேற்று உலகமெங்கிலும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன் திரைப்படம். கல்கியின் மிகவும் பிரபலமான வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்க ரவிவர்மன், தோட்டாதரணி கூட்டு இணைவில் படம் மிகச்சிறப்பாக வெளிவந்திருக்கிறது.
படத்தின் கூடுதல் சிறப்பு ஏஆர். ரகுமான் இசை. இவரின் இசையில் படத்தை அப்படியே சோழப்பேரரசுக்கே ரசிகர்களை கொண்டு சேர்க்கிறது. பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் நடித்ததற்காக எனக்கு தான் சிறந்த நடிகருக்கான விருதை கொடுக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார். அதற்கான காரணத்தையும் தனக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார். பக்கத்தில் ஒரு அழகான பெண்மணி இருந்தும் அவளை ரசிக்க முடியாத படி இருப்பது நடிப்பது மிகவும் கடினமானது.
அதுவும் உலக அழகி பக்கத்தில் இருந்தும் அவருக்கு எதிரான கதாபாத்திரமாக நான் நடித்திருப்பேன். அவரை ரசிக்கமுடியவில்லை. அது எனக்கும் கஷ்டம் அவருக்கும் கஷ்டம். அப்ப நான் எப்படி நடிச்சிருப்பேனு பாருங்க என கூறி சிறந்த நடிகருக்கான விருது எனக்கு தான் கொடுக்க வேண்டும் என கூறி ஆனால் சத்தியமாக விகடன் எனக்கு விருதை கொடுக்கப்போவதில்லை என நக்கலாக கூறினார்.