தமிழ்ப்படங்களில் பணியாற்றிய சிறந்த எடிட்டர்கள் - ஒரு பார்வை
எடிட்டர் தான் ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருக்கிறார். எடுக்கப்பட்ட காட்சிகளை திறம்பட கோர்வையாக மாற்றித்தரும் பணியைச் செய்பவர் இவர் தான்.
இவர்கள் ஒழுங்காக எடிட்டிங் செய்தால் தான் படத்தின் கதையே நமக்குப் புரியும். தேவையில்லாத காட்சிகளை நீக்குவதும், தேவையான காட்சிகளை சேர்ப்பதும் தான் இவர்களது முக்கிய வேலை. அந்த வகையில் தமிழ்சினிமாவின் சிறந்த எடிட்டர்களில் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.
எடிட்டர் லெனின்
தமிழ், மலையாளம், இந்தி படங்களில் எடிட்டராகப் பணியாற்றியுள்ளார். இவருடன் நீண்டநாள்களாக உதவியாளராக இருந்தவர் வி.டி.விஜயன்.
இவரது உதிரிப்பூக்கள், நாயகன், கீதாஞ்சலி, அஞ்சலி, காதலன் ஆகிய படங்கள் சிறந்தவை. இவற்றிற்கு தேசிய விருதுகள் கிடைத்தன. 80 மற்றும் 90களில் இவரது படங்கள் தான் ஏராளமாக ஹிட் அடித்தன.
பிரவீன் கே.எல்.
இவர் ஈ நாடு டிவிக்காக பகுதிநேரமாகத் தொழில் புரிந்தார். பாலுமகேந்திராவின் டிவி சீரியல்களுக்கும் இவர் பணியாற்றியுள்ளார். 2008ல் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்திற்கு பணிபுரிந்துள்ளார்.
இதற்காக சிறந்த எடிட்டருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றார். ஆரண்ய காண்டம் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார். கொம்பன், கபாலி, மாநாடு, தேள், மதகஜராஜா ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.
ஏ.எல்.ரமேஷ்
சமுத்திரக்கனி மற்றும் சசிக்குமாரின் படங்களில் இவர் எடிட்டராகப் பணிபுரிந்துள்ளார். 2009ல் வெளியான நாடோடிகள் படத்திற்காக சிறந்த எடிட்டருக்கான விஜய் விருதைப் பெற்றார்.
வெற்றிவேல், தொண்டன், நிமிர்ந்து நில், நாடோடிகள் 2, அப்பா ஆகியவை இவரது எடிட்டிங்கில் உருவானவை.
பிலோமின் ராஜ்
இவரது சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு பணியாற்றக்கூடியவர். சிறந்த எடிட்டிங்கிற்காக விஜய் விருதுகள் மற்றும் நார்வே தமிழ்ப்பட விருதையும் பெற்றுள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், ஜெய்பீம் படங்கள் இவரது எடிட்டிங்கில் சிறந்தவை. சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்குவித்துக் கொண்டு இருக்கும் விக்ரம் படத்தின் எடிட்டர் இவர் தான்.