கடுப்பான பிக்பாஸ் டீம்.. மிட் வீக் எவிக்ஷனில் ஒரு ஆடு காலி… யாரு தெரியுமா?
Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் சீசன் 7 மோசமாக மொக்கை வாங்கி கொண்டு இருப்பதால் அதன் கிரியேட்டிவ் டீம் முழ்கும் கப்பலை கட்டையை போட்டு அடைப்பது போல என்னவோ செய்து பார்த்து வருகின்றனர். அதிலும் கூட இவர்கள் அடங்குவது மாதிரி தெரியவில்லை.
இந்த சீசன் தொடங்கியதில் இருந்து சறுக்கல் தான். இரண்டு வீடு கான்செப்ட். எந்த டாஸ்க்கும் இல்லாமல் வாயாலே கண்டெண்ட்டை வைத்து ஓட்டி வருகின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு போர் அடித்து கொஞ்சம் கொஞ்சம் பழைய டாஸ்க்கை பட்டி பார்த்து போட்டு விடுகின்றனர். அந்த வகையிலும் கூட டிஆர்பி பெரிய அளவில் அடிவாங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: சென்சார் பிரச்சனையால் தலைப்பு மாற்றப்பட்ட ரஜினி படம்!. அட இது தெரியாம போச்சே!..
இதை தொடர்ந்து, சமீபத்தில் டான்ஸ் மராத்தான் கொடுத்த டாஸ்கில் கூட கண்டமேனிக்கு ஆடிய மாயா, பெர்மான்ஸே செய்யாத கூல் சுரேஷ் என ரசிகர்களே கடுப்பாகும் செயல்கள் கூட நடந்தது. ஒரு கட்டத்தில் பிக்பாஸே உங்களிடம் இதை எதிர்பார்க்கவே இல்லை என வெறுப்பாக சொல்லி முடித்தார்.
சொன்னா கேட்க மாட்டாங்க என்ற ரீதியில் பிக்பாஸ் டீம் மிட் வீக் எவிக்ஷனை வைத்து இருக்கிறார்கள். இந்த வார நாமினேஷனில் விஷ்ணு, அனன்யா, கூல் சுரேஷ், தினேஷ், நிக்ஷன், அர்ச்சனா ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் மிட் வீக் எவிக்ஷனை அறிவிப்பது போல ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் போட்டியாளர்களிடன் புகைப்படத்தினை கட்டிங்காக வைத்து அது நிறைவாகாத நபர் வெளியேறுவார் எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: மகளுக்காக மீண்டும் ரெடியாகும் ரஜினி!.. குட்டிக்கதை ரெடியா சார்?!.. கேப்பு விடாம அடிச்சா எப்படி!..
இந்நிலையில் இணையத்தகவலின்படி அது அனன்யா ராவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இல்லையென்றால் கூல் சுரேஷ் இருவரில் ஒருவர் தான் இன்று பிக்பாஸ் வீட்டை வெளியேறுவார் எனப் பேச்சுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.