நான் பள்ளிக்கெல்லாம் போகல…எனக்காக பாகவதர் இத பண்ணினாரு… சச்சுவின் சுவாரஸ்யமான தகவல்கள்…

Actress Sachu: சச்சு தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர். இவர் தனது குழந்தைபருவம் முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார். மிகவும் கட்டுகோப்பான குடும்பத்தில் பிறந்த இவர் தனது குடும்பத்தாரின் அனுமதியுடன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் வீரத்திருமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், சிவா நடிப்பில் வெளியான தில்லுமுல்லு போன்ற திரைப்படங்களின் மூலம் தனது எதார்த்தமான கதாபாத்திரத்தை வெளிகாட்டினார்.இவர் சின்னதிரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் இப்போது கூட பல திரைப்படங்களில் வயதான கதாபாத்திரத்தில் தனது காமெடி கலந்த நடிப்பினை வெளிகாட்டி வருகிறார்.

இதையும் வாசிங்க:அந்த ஒரு காட்சி! ரியாலிட்டியை வெளிப்படுத்த இப்படியெல்லாமா பண்ணாரா? சிவாஜி பகிர்ந்த ரகசியம்

இவர் தனது சிறு வயதில் சங்கீதம் கற்று கொண்டவர். மேலும் இவர் பள்ளிக்கெல்லாம் சென்று படித்ததில்லையாம். சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிப்பதனால் பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிவரும் என்பதால் இவரை எந்த பள்ளியிலும் சேர்த்து கொள்ளவில்லையாம்.

பின் தனது பாட்டியின் ஒத்துழைப்புடன் அனைத்து வசதிகளையும் தனது வீட்டிற்கே வரவைத்துகொண்டாராம். தந்து பள்ளி படிப்பு, நாட்டியம், சங்கீதம் என அனைத்து வசதிகளையும் தனது வீட்டிலேயே ஏற்படுத்தி கொடுத்தாராம் சச்சுவின் பாட்டி.

இதையும் வாசிங்க:நடிகர் திலகம் சொன்ன அந்த ஒரு வார்த்தை!. தோல்வியை கூட அசால்ட்டா தூக்கி போட்ட சச்சு..

பின் ஒரு நாள் இவரது சிறுவயதில் இவரை மேடையில் பாடுவதற்கு அழைத்துள்ளனர். ஆனால் அதுவரை சச்சு எந்தவொரு மேடையிலும் பாடியது இல்லையாம். சச்சு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பாட்டியோ கண்டிப்பாக பாட வேண்டும் என கூறியதால் பின் சம்மதித்துவிட்டாராம். அவர் விநாயகரை பற்றிய பாடல் பாட வேண்டியிருந்தது. மேடையில் இருந்து பாட ஆரம்பிக்கும் பொழுது இவருக்கு பயத்தில் குரலே வரவில்லையாம்.

அப்போது அங்கு சிறப்பு விருந்தினராக எம்.கே.தியாகராஜ பாகவதர் வந்துள்ளார். அப்போது சச்சுவை பார்த்த அவர் மேடைக்கு வந்து அங்கிருந்த இசையமைப்பாளர்களிடம் என்ன ஸ்ருதி என கேட்க அவர்கள் பதிலளித்துள்ளனர். பின் பாகவதரே அந்த விநாயகர் பாடலை பாட ஆரம்பித்துள்ளார். மேடைக்கு கீழ் இருந்த அனைவரும் கைகூப்பி எழுந்து நின்று பாடலை ரசித்துள்ளனர். ஆனால் சச்சுவோ அந்த ஆனந்தத்தை அனுபவிக்க தெரியாத வயது என்பதால் சாதாரணமாகவே எடுத்து கொண்டுள்ளார்.

இதையும் வாசிங்க:ஆபிஸ் பாய் என அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர்… அதையும் தாண்டி சாதித்து காட்டிய எம்.எஸ்.வி…

Related Articles
Next Story
Share it