
Cinema History
நக்கலடித்த கமல்.. பழிவாங்கிய பாக்கியராஜ்.. 16 வயதினிலே படப்பிடிப்பில் இவ்வளவு நடந்துச்சா!..
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் கே.பாக்கியராஜ். உதவி இயக்குனராக வேலை செய்து, பின் நடிகராகி, பின் இயக்குனராகி பல திரைப்படங்களை இயக்கியவர். குறிப்பாக இவரின் படங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம் உண்டு. 80களில் மேட்னி ஷோ என அழைக்கப்படும் மதிய காட்சியில் தியேட்டர்கள் நிரம்பி வழிய காரணமாக இருந்ததே பாக்கியராஜ் படங்கள்தான்

bhagyaraj
இவர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களில் ஒரு காட்சியில் வரும் நடிகராக சில படங்களில் நடித்தும் இருக்கிறார். 16 வயதினிலே படம் உருவான போது, உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ஸ்ரீதேவிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவராக பாக்கியராஜ் ஒரு காட்சியில் வருவார்.
இந்த காட்சி எடுக்கும்போது அவர் அந்த வேடத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொள்ளவில்லையாம். இவர் எப்படி நடிப்பார்.. வேண்டாம் என்றாராம். ஆனால், பாரதிராஜாவோ பாக்கியராஜ் மீது நம்பிக்கை வைத்து ‘அவர் நன்றாக நடிப்பார்’ என்றாராம். சரி ஒரு ஒத்திகை பார்ப்போம் என கமல் சொல்ல, ‘ஆத்தா செத்துப்போச்சி. இனிமே மயிலுக்கு ஒத்தாசையா நீதான் இருக்கணும்’ என்கிற வசனத்தை பாக்கியராஜ் தப்பு தப்பாக பேசியுள்ளார்.

kamal
எனவே, கோபமடைந்த கமல் பாரதிராஜாவிடம் இவர் வேண்டாம் என்றாராம். பாரதிராஜாவை தனியே அழைத்து சென்ற பாக்கியராஜ் ‘சார் நான் உங்கள் அசிஸ்டண்ட். என் மீது நம்பிக்கை இருந்தால் டேக் போங்க’ என்றாராம். எனவே, கமலை சமாதானப்படுத்தி பாக்கியராஜை நடிக்க வைத்துள்ளார் பாரதிராஜா.

16 vayathinile
ஆனால், அந்த வசனத்தை பாக்கியராஜ் பேசும் போது கமல் ‘ஆங்’ என சொல்லிக்கொண்டே இருந்தாராம். கமல் தன்னை நடிக்கவிடாமல் செய்யவே இப்படி செய்கிறார் என்பதை புரிந்து கொண்ட பாக்கியராஜ் வசனத்தில் முடிவில் ‘இப்படியே எது சொன்னாலும் கோவில் மாடு மாதிரி தலைய ஆட்டு. என்ன புரிஞ்சதோ என்னவோ’ என ஒரு வசனத்தை பேசிவிட்டாராம் பாக்கியராஜ். பாக்கியராஜை தனியே அழைத்து சென்று ‘கமல் முன்னாடி இப்படி ஒரு வசனத்தை பேசிட்டியே’ என பாரதிராஜ கேட்க, சார் அவர் என்னை வாரி விட பார்த்தார். அதனால், எனக்கு கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன் என பாக்கியராஜ் சொன்னாராம்.
பாக்கியராஜ் பேசும் அந்த வசனமும் 16 வயதினிலே படத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏத்தி விட்ட ஏணியை மறந்து போனாரா சூர்யா?.. ஹிட் கொடுத்த இயக்குனர்களை தவிர்ப்பது ஏன்?..