முடிவை மாற்றிய கோபி!.. பாக்யலட்சுமி சீரியல விட்டு விலகல.. என்ன காரணம்னு தெரியுமா?..

by Rohini |   ( Updated:2023-05-05 19:57:22  )
gopi
X

gopi

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலாக ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். கடந்த மூன்று வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் எப்பவும் டிஆர்பி யில் நம்பர் ஒன் சீரியலாகவே இருந்து வருகிறது.

சுசித்ரா இந்த சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார் .மேலும் நடிகை ரேஷ்மா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் மிகவும் ஹைலைட்டாக திகழும் நடிகர் சதீஷ். கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் பெரும்பாலான குடும்பப் பெண்களை கவர்ந்த நடிகராக திகழ்கிறார். அதற்குக் காரணம் அவருடைய அந்த வெயிட்டான கதாபாத்திரம் தான்.

இந்த கதாபாத்திரத்தை பற்றி ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறிய சதீஷ் இந்த கதாபாத்திரத்தால் தனக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதாக கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் அதை தன்னால் தாங்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கோபி என்கிற சதீஷ் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தான் விலகுவதாக ஒரு செய்தியை தனது வலைதல பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதனைக் கண்டு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று கோபியின் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

அதாவது பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து நான் விலகவில்லை என்றும் ஆனால் எனக்கு பிரச்சனைகள் இருந்தது உண்மைதான் என்றும் அந்த பிரச்சனைகள் இப்பொழுது தீர்ந்து விட்டன என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில்கள் எனக்கு கிடைத்து விட்டன என்றும் கூறி இனிமேல் இந்த சதிஷை நீங்கள் கோபியாக பாக்கியலட்சுமி சீரியலில் கண்டு களிக்கலாம் என்றும் மிகவும் மகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : கமல் படங்களைத் தவிர வேறு எந்த படங்களையும் பார்ப்பதில்லை.. காரணத்தை கூறிய கன்னடத்துப் பைங்கிளி!..

Next Story