என்னை பத்தி கவலைப்படாதீங்க! இனிமேல் அவங்கதான் – உருக்கமான பதிவை வெளியிட்ட சீரியல் நடிகர்

Published on: June 8, 2023
gopi
---Advertisement---

சினிமா படங்களை விட சீரியல்கள் மக்களை மிக எளிதாக ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றன. நம்முடன் இருக்கும் உறவினர்களாகவே சீரியல் நடிகர் நடிகைகளை மக்கள் ரசிக்க தொடங்கி இருக்கின்றனர். அந்த அளவுக்கு சீரியல்கள் மக்களை மிக நெருக்கமாக பிணைத்துக் கொண்டிருக்கின்றன. சினிமா பிரபலங்களுக்கு கிடைக்கும் மரியாதை புகழை விட சீரியல் நடிகர் நடிகைகளுக்கு தான் பொது இடங்களில் அதிக அளவு பெயரும் புகழும் வரவேற்பும் கிடைத்து வருகின்றன.

Gopi1
Gopi1

அந்த வகையில் மக்களுடன் ஒன்றிப்போன ஒரு சீரியலாக கருதப்படுவது விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆன பாக்கியலட்சுமி சீரியல். மூன்று ஆண்டுகளையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் இந்த பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் நம்பர் ஒன் சீரியலாகவே இருந்து வருகின்றது.

பாக்கியலட்சுமி சீரியலில் சுசித்ரா என்ற நடிகை லீடு ரோலில் நடித்து வருகிறார். அவரோடு இணைந்து சின்னத்திரை கவர்ச்சி நாயகியாக வலம் வரும் ரேஷ்மாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த சீரியலின் ஹைலைட்டே கோபி என்ற கதாபாத்திரம் தான்

gopi2
gopi2

.

அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ் பெரும்பாலான குடும்பப் பெண்களை கவர்ந்த நடிகராகவே திகழ்ந்து வருகிறார். அதற்கு காரணம் அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த வெயிட்டான ரோல் தான். இந்த நிலையில் கோபியாக நடித்து வரும் சதீஷை பற்றி அவ்வப்போது சில செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒரு சமயம் அவர் விலகுவதாகவும் மீண்டும் அவர் திரும்ப வந்து நடிப்பதாகவும் இந்த மாதிரி பல செய்திகள் வந்து கொண்டே இருந்தன.

அதைப் பற்றி சதீஷும் தன்னுடைய வீடியோ மூலம் உண்மையான செய்தி என்ன என்பதை வெளியிட்டுக் கொண்டும் இருந்தார். ஆனால் இப்போது அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவால் அவரின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். அதாவது அவருடைய முகத்தில் பிம்பிள் வந்திருப்பதாகவும் மிகவும் வயதாகியும் விட்டதால் எதிர்காலத்தில் தன்னுடைய மகளாக நடிக்கும் இனியா மற்றும் மகனாக நடிக்கும் எழில் இவர்கள்தான் இந்த கதையில் தொடர்ந்து கொண்டு இருப்பார்கள் என்றும் என்னைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம் .இந்த சீரியல் இன்னும் பெரும் உயரத்தை அடையும் என்றும் ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

gopi3
gopi3

இவர் கூறியதிலிருந்து ஒருவேளை இந்த பாக்கியலட்சுமி சீரியலில் இவருடைய கதாபாத்திரம் அப்படியே மறைந்துவிடுமோ என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.

இதையும் படிஙக : 20 வருடங்களுக்கு பிறகு அந்த ஒரு மேஜிக்! ‘தளபதி68’ படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் நடிகை

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.