Categories: Cinema News Entertainment News latest news television

அதுல நம்பிக்கை இல்ல… பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய… விஜே விஷாலின் முதல் பதிவு!

தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து, யாரும் எதிர்பாராதவிதமாக விஜே விஷால் வெளியேறி இருக்கிறார்.

விஜய் டிவிக்கு அதிக டிஆர்பியை பெற்றுத்தரும் சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. கடந்த 2௦19-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு ஆண்களும் மிகப்பெரிய ரசிகர்களாக இருக்கின்றனர்.

இதில் நாயகியான பாக்கியாவின் மகன் எழிலாக அவருக்கு சப்போர்ட் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே எழில்.

கலகலப்பான இளைஞராக நடித்து வந்த எழிலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து தற்போது விஷால் விலகி இருக்கிறார்.

அவருக்குப் பதிலாக இந்த சீரியலில் தற்போது நவீன் நடித்து வருகிறார். அவர் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

விஷால் என்ன காரணத்தினால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினார் என்பது மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில் திடீரென தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷால் பதிவொன்றை போஸ்ட் செய்துள்ளார்.

அதில், ” சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுக்கிறேன். பிறகு அவற்றை சரி செய்கிறேன்,” என தெரிவித்து இருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பிரச்சினை காரணமாக விஷால் விலகினாரா? இல்லை விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வதற்காக இந்த சீரியலை விட்டு விலகினாரா? என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இதன் காரணத்தை விஷால் தான் விளக்கம் வேண்டும் என்பதால் அதுவரை நாம் சற்று அமைதியாக காத்திருக்கத் தான் வேண்டும்.

Published by
manju