---Advertisement---

பாக்கியராஜ் ஒரு திரைக்கதை மன்னன்… சூப்பர் மேட்சான கிளைமாக்ஸ் சீனைப் பாருங்க…!

Published on: April 10, 2026
bhagyaraj
---Advertisement---

இந்தியா முழுவதும் உள்ள பல திரைக்கலைஞர்களால் ‘திரைக்கதை மன்னன்’ என்று இன்று வரை போற்றப்பட்டுக் கொண்டிருப்பவர் தான் கே.பாக்கியராஜ். அவருக்கு அப்படி ஒரு பட்டம் கிடைத்தது என்றால் அதற்கு அவர் எந்தளவுக்கு தகுதியானவர் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் தான் இது.

கே.பாக்கியராஜ் இயக்கத்தில் உருவானது அந்த 7 நாள்கள். இதன் கதை எல்லாருக்குமே தெரிந்தது தான். அந்தப் படத்தின் உச்சபட்ச காட்சியைப் படமாக்கும்போது பாக்கியராஜூக்கே சிறிது குழப்பம் ஏற்பட்டது. அவரது குருநாதர் பாரதிராஜா உள்பட பலபேருக்கிட்ட அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பற்றி கலந்து பேசிட்டுத்தான் அந்தப் படத்தின் உச்சபட்ச காட்சியை எடுத்தார்.

கிளைமாக்ஸில் பாக்கியராஜைக் காதலிக்கும் அம்பிகா சந்தர்ப்ப சூழ்நிலையால ராஜேஷைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் அவரோடு வாழப்பிடிக்காமல் விஷம் குடித்து விடுகிறார். இப்போது கணவருக்கு மனைவியின் காதல் விவகாரம் தெரிகிறது.

அதனால காதலனை அழைத்துக் கொண்டு அந்தக் காதலன்கிட்ட தன்னோட மனைவியை ஒப்படைக்கிறார். அப்போது பாக்கியராஜ் அந்தப் பெண்ணைப் பார்த்து அவர் கட்டுன தாலியைக் கழட்டிட்டு எங்கூட வர முடியுமான்னு கேட்கிறார். அப்போ தான் அந்தப் பெண்ணுக்குத் தாலியின் மகிமை தெரிகிறது. அதைக் கழட்டிவிட்டு வர முடியாமல் தடுமாறுகிறாள். அப்போ நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழறதுதான் சரி. நாம காதலிச்சோம்கறது எல்லாம் வேற விஷயம். இப்போது உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது.

அந்தப் பந்தத்தை சீர்குலைத்து விடாதே என அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறுகிறார் பாக்கியராஜ். இப்படிப்பட்ட கிளைமாக்ஸோடு வந்த அந்த 7 நாள்கள் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து வந்த பாக்கியராஜின் மனைவியான பிரவீனா, பாக்கியராஜிக்கிட்ட என்ன இருந்தாலும் அந்தப் படத்துல அவங்க ரெண்டு பேரையும் கடைசியில சேர்த்து வச்சீங்களே. அது தப்பு. இந்தப் பெண்ணை நீங்க கையோடு கூட்டிட்டு வந்துருக்கணும். அவரோட வாழப் பிடிக்காமல் தான அந்தப் பெண் விஷத்தைக் குடிச்சாள். அப்படிப்பட்ட பெண்ணை திரும்ப அவரு கூடவே வாழ வைக்கிறதுல என்ன நியாயம்? அந்தப் பெண்ணோட தாம்பத்யம் நடத்தும்போது இந்தப் பெண் ஏற்கனவே ஒருவரை காதலிச்சவருதான. அதனால தான விஷம் குடித்தாள் என்ற நினைப்பு உருத்திக்கிட்டே தானே இருக்கும் என்று பாக்கியராஜிடம் கேட்டாள் பிரவீனா.

அப்படி அவர் கேட்டபோது அவரது வாதம் சரியாக இருப்பது போல பாக்கியராஜூக்கு முதலில் தோன்றினாலும், சிறிது நேரம் சிந்தித்து விட்டு பிரவீனாவுக்கு அழகான ஒரு பதிலைச் சொன்னார் பாக்கியராஜ். நீ சொல்றது சரியான வாதம்தான். ஒரு தனிமனித கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது அதுதான் சரியானது. எங்கோ ஒரு குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சனை நடந்தா காதும் காதும் வச்ச மாதிரி அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சி விடுறதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது. ஆனா சினிமாவிலோ, பத்திரிகையிலோ ஒரு சேதியைச் சொல்லும் போது, எடுத்தேன். கவிழ்த்தேன்னு சொல்லிட முடியாது. அதுக்கு ஒரு சந்தோஷம் வேணும்.

சமூகப் பார்வை வேணும். ஏன்னா நாம சினிமாவுல சொல்லக்கூடிய விஷயம் இருக்கே. அது பல பேரோட வாழ்க்கையில தாக்கத்தை ஏற்படுத்தும். சில குறைகள் இருந்தாலும் எல்லோருக்கும் நல்லது அப்படின்னு நம்முடைய பெரியவர்கள் சிலர் சில சமூகக் கட்டுப்பாடுகளை வைத்துள்ளனர். அதுக்கு நாம மதிப்பு கொடுக்கணும். அதில் சில தனிமனித மீறல்கள் வரலாம். கோபங்கள் வரலாம். அதுக்காக ஒட்டுமொத்த சமூகப்பார்வையை புறக்கணிக்க முடியாது. மனதுக்கு விருப்பமானவரோடு வாழ அனுமதிக்கக்கூடாது. அப்படி வாழ அனுமதிச்சிட்டோம்னா கல்யாணம் அப்படிங்கற அமைப்பே சீர்குலைஞ்சிப் போயிடாதா? நம்ம மனசைப் பொருத்தவரைக்கும் அது ஒரு குரங்கு அப்படின்னுதான் சொல்லணும்.

சில காலம் உன்னையே நினைச்சிக்கிட்டு இருக்கும். அதுக்குப் பின்னால அது தன்னையே மாத்திக்கும். அதனால எதையும் சமூகக் கண்ணோட்டத்தோடு பார்க்கணும் அப்படின்னு தன்னோட மனைவி பிரவீனாவுக்கு அறிவுரை கூறினார் பாக்கியராஜ். அவர் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பதற்கு இதே போல பல சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.