More
Categories: Cinema News latest news

தவறாக புரிந்திருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்!…பாக்கியராஜ் சரியாத்தான் பேசுறாரா?..

பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022″ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது.

இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட, திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய பாக்கியராஜ் ‘பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை.பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது” என பேசினார்.

Advertising
Advertising

மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனர் பாக்கியராஜ் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என அவர் கூறியது ஊனமுற்றோரின் இயலாமையை குறைத்து பேசி, அவரின் தனிப்பட்ட அரசியல் ஆதாயம் காணும் முயற்சி என சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘நான் பேசியதை யார் தவறுதலாக புரிந்து கொண்டாலும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் பாஜகவை சேர்ந்தவர் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

தவறாக பேசிவிட்டேன் எனக்கூறி மன்னிப்பு கேட்டால் பரவாயில்லை. நான் பேசியதை யார் தவறாக நினைத்திருந்தாலும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் பாஜகவை சேர்ந்தவன் இல்லை’ எனக்கூறியுள்ளார். எனவே, நான் சரியாகத்தான் பேசியிருக்கிறேன். தவறாக நினைப்பவர்களிடம் மட்டும் மன்னிப்பு கேட்கிறேன்’ எனக்கூறி மன்னிப்பு கேட்டது திருப்தியாக இல்லை என பலரும் கூறி வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts