படத்தை கெடுக்கப் போறாங்கேளா இல்லையானு தெரியல.. ரீமேக் ஆகும் பாக்யராஜின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படம்!..

Published on: January 21, 2023
bhaki
---Advertisement---

1983 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்த படம் ‘முந்தானை முடிச்சு’. இந்த படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக ஊர்வதி நடித்திருப்பார். படம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மேலும் படத்தின் திரைக்கதையை இன்று வரை யாரும் அந்த அளவுக்கு கொண்டு போனதே இல்லை.

பெஸ்ட் ஸ்கீரின் ப்ளேக்கு உதாரணமாக அமைந்த படமாக முந்தானை முடிச்சு அமைந்தது. மேலும் சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒரு பாடமாகவே இந்த படம் வைக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமில்லாமல் திரைக்கதைக்கு ஒரு இலக்கணமாகவும் இந்த படம் விளங்குகிறது.

bhaki1
bhagyaraj

இந்த நிலையில் முந்தானை முடிச்சு படத்தை ரீமேக் செய்யும் முயற்சியை சில ஆண்டுகாலமாகவே பாக்யராஜ் எடுத்து வந்தார். மீண்டும் ரீமேக் படத்தில் பாக்யராஜ் தான் கதை திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கிறாராம். ஆனால் படத்தை இயக்குவது அவரா இல்லையா என்று இதுவரை தெரியவில்லை.

இதையும் படிங்க :தளபதி 67… LCU கன்ஃபார்ம்?? ஆனா அங்கதான் ஒரு குழப்பமே… என்ன பிரச்சனை தெரியுமா??

மேலும் ரீமேக்கில் பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கிறாராம். ஊர்வதி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாராம். இத்தனை நாள்களாக படம் இழுத்துக் கொண்டே இருப்பதற்கு காரணமே ஐஸ்வர்யா ராஜேஷ் தானாம். ஏனெனில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருந்ததனால் அவரால் இந்த படத்திற்கு கால்சீட் கொடுக்க முடியவில்லையாம்.

bhaki2
sasikumar aishwarya rajesh

அம்மணி இப்போது தான் ஃபிரீயாக இருக்கிறாராம். அதனால் முழு மூச்சுடன் இந்த படத்தை எடுக்கும் முயற்சியில் பாக்யராஜ் இறங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் முந்தானை முடிச்சு படத்தின் ஹைலைட்டே முருங்கைக்காய் தான். ஆனால் ரீமேக் படத்தில் என்ன சிறப்பம்சம் இருக்கும் என்று தெரியவில்லை.