Connect with us
bhagyaraj

Cinema History

அந்த படத்துக்கு நான் எழுதின கதையே வேற!.. சூப்பர்ஹிட் படத்தின் சுவாரஸ்யம் சொன்ன பாக்கியராஜ்…

Bhagyaraj movies: 80களில் தனது திரைக்கதை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜ். இவரின் படங்களுக்கு பெண் ரசிகை கூட்டம் எப்போதும் அதிகம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இவரே இயக்கி இவரே நடிப்பார். அதுதான் பாக்கியராஜின் ஸ்டைல். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பெண்களிடம் அவ்வளவு வரவேற்பை பெற்றது.

இவர் இயக்கும் கதையில் இவரின் கதாபாத்திரம் இன்னசண்ட்டாக அதாவது எதுவும் தெரியாத அப்பாவி போல அமைக்கப்பட்டிருக்கும். அதுவே, ரசிகர்களுக்கும் பெண்களுக்கும் பிடித்துப்போனது. அந்த ஏழு நாட்கள், தூரல் நின்னு போச்சி, மௌன கீதம், எங்க சின்ன ராசா, முந்தானை முடிச்சி, ராசுக்குட்டி இவரின் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இதையும் படிங்க: அந்த படத்தை காட்டி என்னை மிரட்டினாங்க!.. மேடையிலேயே சொன்ன பாக்கியராஜ்.. கமல் கொடுத்த பதிலடி…

தமிழ் மட்டுமில்லாமல் சில ஹிந்தி படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார். அனில் கபூர் முதல் அமிதாப்பச்சன் வரை பலரையும் இவர் இயக்கியிருக்கிறார். 80களில் திரைக்கதை மன்னனாகவும் வலம் வந்திருக்கிறார். இவரின் குருநாதர் பாரதிராஜாவின் பல படங்களுக்கு திரைக்கதையில் உதவியிருக்கிறார்.

90களுக்கு பின் பாக்கியராஜின் படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இதனால் நஷ்டத்தையும் சந்தித்தார். இப்போது சினிமாவில் நடித்து மட்டும் வருகிறார். மேலும், சினிமாவில் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

இதையும் படிங்க: தேவர் மகனில் ஐஸ்வர்யா!.. கடுப்பான பாக்கியராஜ்!.. கடைசி நேரத்தில் எப்படி மாறியது தெரியுமா?

பாக்கியராஜ் இயக்கி நடித்து 1983ம் வருடம் வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சி. இந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்து 125 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பாக்கியராஜ் இப்படம் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

முதலில் இப்படத்திற்கு நான் எழுதிய கதையே வேறு. வாத்தியார் ஒருவர் குழந்தையை வைத்து கொண்டு ஏமாற்றுவது போலவும், அவருக்கு 4 தங்கைகள் இருப்பது போலவும் கதை எழுதியிருந்தேன் அது நகரத்தில் நடக்கும் அதை. அதன்பின் அதை மாற்றி உண்மையாகவே அவரின் குழந்தை மற்றும் கிராமத்தில் கதை நடப்பது போல கதையை மாற்றிவிட்டேன். அந்த 4 தங்கைகள் என்பதை வேறு கதையாக எழுதி தாவணி கனவுகள் படத்தை இயக்கினேன்’ என பாக்கியராஜ் கூறினார்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு வாய்ப்பு கேட்ட பாக்கியராஜ்!.. அட இது தெரியாம போச்சே!…

google news
Continue Reading

More in Cinema History

To Top