உலக நடப்பு தெரியாத பாக்கியராஜ்… 50 ஆண்டு புகழை இப்படியா கெடுப்பது? பொளந்து கட்டிய பிரபலம்!

திரைக்கதை மன்னன் என்று போற்றப்படும் பாக்கியராஜ் திரையுலக வாழ்க்கையில் சமீபத்தில் தான் 50 ஆண்டுகளைக் கடந்து அதை விழாவாகக் கொண்டாடினார். அவரது படங்களில் அந்த 7 நாள்கள், இது நம்ம ஆளு மிகச் சிறப்பு. சிக்கலான இந்தக் கதை அவரது நேர்த்தியான திரைக்கதையால் மெருகூட்டப்பட்டது. அந்த வகையில் 50ஆண்டுகளாக அவர் சேர்த்து வைத்த பேர் அவர் பேசிய அந்த ஒரு வார்த்தையால் கெட்டுப்போனது என பிரபலம் ஒருவர் பொளந்து கட்டியுள்ளார். என்ன விவரம்னு பாருங்க.

நான் ஒரு கம்மவார் என்பதில் பெருமை கொள்கிறேன்னு தெலுங்கில் பாக்கியராஜ் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஒரு மாநாட்டுல தான் இப்படிப் பேசியுள்ளார். மதியம் 2 மணிக்குத் தான் பாக்கியராஜ் எழுந்திருப்பாராம். அவருக்கு உலக நடப்பே எதுன்னு தெரியாது. அப்படித்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்காரு.

20 வருஷமா சினிமா வாய்ப்பு இல்லை. தனிமை கொடூரமானது. அந்தப் புகழ், அந்த பரபரப்பு குறையும் போது மனசால நொந்து போவாங்க. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சாதிசங்க தலைவர்கள் யார் பிரபலமா இருக்காங்களோ அவங்களை இழுத்துக் கொண்டு விடுவதில் கில்லாடி. அந்த வகையில் பாக்கியராஜைக் கொண்டு வந்து மாநாட்டில் பேச வைத்து விட்டனர். அப்போது அவர் கூட்டத்தைக் கண்டு இப்படி பேசி விட்டார். நம்மைப் பார்க்கத் தான் இவ்ளோ கூட்டமா என்று நினைத்து விட்டார் போலும். சினிமா இப்ப எடுக்க வாய்ப்பு இல்லை. சினிமா எடுத்தாலும் யாரும் வர மாட்டாங்க.

அப்படின்னு நினைச்சி அவர் பேசுனதோட விளைவு தான் இவ்ளோ சர்ச்சை. சாதி என்பது கட்டமைக்கப்பட்ட பிம்பம். சாதி குறித்து இவ்ளோ பெருமை பாக்கியராஜிக்கு வேணுமா? தன்னை இழந்து விட்டாரா பாக்கியராஜ் என்ற கேள்வி எழுகிறது. இது பலருக்கும் பாடம். பாக்கியராஜ் பாரதிராஜாவின் மாணவன். வளர்ந்த தலைமுறை. இவர் பல தலைமுறைகளை உருவாக்கியவர்.

50 ஆண்டுகளாக அவர் சேர்த்து வைத்த பேரை இந்த ஒரு வார்த்தை உளறலால் பேரைக் கெடுத்துக்கிட்டாரே என்று தோன்றுகிறது. அதனால் இனிமேலும் இப்படி அவர் உளறக்கூடாது. இது வெறும் வாயை மென்றவனுக்கு பாக்கியராஜ் அவல் கொடுத்தது போன்றது. டெய்லி மதியம் 2மணிக்கு எழுந்திருப்பவர் காலையில 6 மணிக்கு எழுந்தாருன்னா இவ்ளோ பெரிய சிக்கல் வராம இருந்துருக்கும் என்பதுதான் யதார்த்தம். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

4 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago