Connect with us
Bhagyaraj

Cinema History

சாமிக்கு மாலை போட்டிருந்த இளையராஜாவை கில்மா பாடல் பாட வைத்த பாக்யராஜ்… இப்படி ஏமாத்திட்டாரேப்பா!!

1983 ஆம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “முந்தானை முடிச்சி”. இத்திரைப்படத்தை பாக்யராஜ்ஜே இயக்கியிருந்தார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக “விளக்கு வச்ச நேரத்துல”, “கண்ண தொறக்கனும் சாமி”, “அந்தி வரும் நேரம்” போன்ற பாடல்கள் காலத்துக்கும் ரசிக்கப்படும் பாடல்களாக அமைந்தது.

Mundhanai Mudichi

Mundhanai Mudichi

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “விளக்கு வச்ச நேரத்துல” என்ற பாடலை பதிவாக்கும்போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து இயக்குனர் கே.பாக்யராஜ் ஒரு மேடையில் பகிர்ந்துள்ளார்.

இப்பாடலை பாடலாசிரியர் எழுதிமுடித்த பிறகு இளையராஜா இப்பாடலின் வரிகளை பார்த்தாராம். வரிகளை படித்துப் பார்த்த பிறகு பாக்யராஜ்ஜிடம் “என்ன இப்படி எல்லாம் பாட்டு எழுதிருக்கீங்க?” என கேட்டாராம். அதற்கு பாக்யராஜ் “ஏங்க இப்படி சொல்றீங்க? பாட்டு நல்லா கிளுகிளுப்பாத்தானே இருக்கு” என்றாராம்.

Ilaiyaraaja

Ilaiyaraaja

அதற்கு இளையராஜா “இல்லை இல்லை. நான் இந்த மாதிரி பாட்டெல்லாம் பாடமாட்டேன்” என்றாராம். “ஏன் பாடமாட்டீங்க?” என பாரதிராஜா கேட்க “நான் சாமிக்கு மாலை போட்ருக்கேன்” என இளையராஜா கூறினாராம். எனினும் இளையராஜாவை ஒருவழியாக சம்மதிக்க வைத்தாராம் பாக்யராஜ்.

அப்போது “விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்” என்று பாடுவதற்கு பதிலாக “விளக்கு வைத்த நேரத்துல தன்னானன்னா” என்று பாடிவிட்டாராம். அதன் பின் ஒன் மோர் போகலாம் என கூறியிருக்கிறார் இளையராஜா. ஆனால் பாக்யராஜ்ஜோ, “இல்லை வேண்டாம், இதுதான் நல்லா கிளுகிளுப்பா” இருக்கு என்றாராம்.

இதையும் படிங்க: அஜித்தை கோர்த்துவிடப் பார்த்த ஜெயலலிதா… தல என்ன சொன்னார் தெரியுமா??

Bhagyaraj

Bhagyaraj

உடனே இளையராஜா “இல்லை, இல்லை, நான் பாடிவிடுகிறேன்” என கூற, பாக்யராஜ் “வேண்டாம், விளக்கு வச்ச நேரத்துல தன்னானன்னாதான் நல்லா கிளுகிளுப்பா இருக்கு. நான் நினைச்சத விட நல்லாவே கிளுகிளுப்பா வந்திருக்கு. நீங்க பாட வேண்டாம். இதுவே இருக்கட்டும்” என்றாராம். இவ்வாறு சாமிக்கு மாலை போட்டிருந்த இளையராஜாவை நினைத்ததை விட கிளுகிளுப்பாக பாடவைத்துள்ளார் பாக்யராஜ்.

google news
Continue Reading

More in Cinema History

To Top