பாக்யராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்!.. கேட்கும்போதே வேற லெவலா இருக்கே!..
இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னராக திகழ்ந்து வந்தவர் கே.பாக்யராஜ். இவர் தற்போது படம் இயக்குவதை குறைத்துக்கொண்டாலும் பல திரைப்படங்களில் சிறப்பான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட “டாடா” திரைப்படத்தில் கவினுக்கு தந்தையாக தனது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
விஜய் சேதுபதி-சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி தற்போது இந்திய சினிமாவிலேயே மிகவும் பிசியான நடிகராக திகழ்ந்து வருகிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
அதே போல் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன், தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Anthology திரைப்படம்…
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ், ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது சில ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதியை வைத்து ஒரு குறும்படத்தை இயக்க முடிவு செய்தாராம் பாக்யராஜ். அதனை விஜய் சேதுபதியிடம் கூறியபோது அவரும் நடிப்பதாக ஒப்புக்கொண்டாராம்.
அத்திரைப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வதாக இருந்ததாம். அப்போது ஒரு முறை பி.சி.ஸ்ரீராம் பாக்யராஜ்ஜிடம், “இந்த குறும்படத்தால் நமக்கு பொருளாதார ரீதியாக எந்த பயனும் இருக்காது. இதனை ஏன் 4 குறும்படங்களாக இணைத்து Anthology ஆக பண்ணக்கூடாது” என கேட்டிருக்கிறார்.
இந்த யோசனை நன்றாக இருக்கிறதே என பாக்யராஜ்ஜுக்கு தோன்றியதாம். அதனை தொடர்ந்து ஒரு குறும்படத்தில் விஜய் சேதுபதி, இன்னொரு குறும்படத்தில் சிவகார்த்திகேயன், இன்னொரு குறும்படத்தில் சாந்தனு பாக்யராஜ் ஆகியோரை நடிக்க வைக்கலாம் என சிந்தித்தாராம். ஆனால் அதற்குள் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டதால் அந்த புராஜெக்ட் கொஞ்சம் தடைபட்டுவிட்டதாம். எனினும் மீண்டும் அந்த புராஜெக்ட் தொடங்கும் என்று அப்பேட்டியில் பாக்யராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.