பாக்யராஜ் உடலுக்கு நாளை இறுதி அஞ்சலி – காலை 9 மணிக்கு இறுதி ஊர்வலம், 11 மணிக்கு நல்லடக்கம்

 
raj

மறைந்த பாக்யராஜின் உடலுக்கு பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு குடும்பத்தினரையும், நண்பர்களையும், பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், பாக்யராஜின் இறுதிச் சடங்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு அவரது உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. பின்னர் காலை 11 மணியளவில் நல்லடக்கம் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக 1 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்யராஜின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரை அறிந்த அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

பாக்யராஜ் மறைவை அறிந்த சினிமா பிரபலங்கள் இன்று காலை முதல் அவரது வீட்டுக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய், மு.க. ஸ்டாலின், சீமான், சிவகுமார், திருமாவளவன், எச். வினோத், ஸ்ரீகாந்த், தேவா என பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

Tags

From Around the web