கிளுகிளுப்பான அந்த பாடல்...! பாட மறுத்த இளையராஜா...! இருந்தாலும் நம்ம பாக்யராஜுக்கு குசும்பு அதிகம் தான்...
தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான படைப்புகளால் மிகவும் பிரபலமானவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். இயக்குனராக பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு பின் தன் திறமையால் நடிகராகவும் உயர்ந்தார். முதன் முதலாக ஏவிஎம்மில் படம் பண்ணுவதற்காக பாக்யராஜுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அது தான் முந்தானை முடிச்சு. அந்த படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார்.
மேலும் ஏற்கெனவே கங்கை அமரன் மீது பாசம் கொண்ட பாக்யராஜ் என் படத்துக்காக நீங்கதான் இசையமைக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இப்போது முந்தானை முடிச்சு படத்திற்காக அவர் தான் இசையமைக்க வேண்டும் என தீர்க்கமாக நம்பிக் கொண்டிருந்த வேளையில் ஏவிஎம்மில் இந்த கதைக்கு ஏற்ற இசையமைப்பாளர் இளையராஜா தான் என்று சொல்ல பாக்யராஜ் இல்லை. நான் கங்கை அமரனுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன் என கூறியிருக்கிறார்.
ஒருவழியாக கங்கை அமரனிடம் பேசி அவருக்கு பதிலாக இளையராஜாவை கமிட் செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். ஆனால் இளையராஜா எனக்கு முதல் கங்கை அமரனை தானே பேசியிருந்தீர்கள் என்று அவர் கோபப்பட அவரையும் ஒருவழியாக சம்மதிக்க வைத்திருக்கிறது ஏவிஎம் நிறுவனம். திடீரென பாக்யராஜ் ஒரு சந்ததியை சொல்லி இதை பாடி காண்பியுங்கள் என்று விளக்கு வைச்ச நேரத்துல என்ற சந்ததியை சொல்லியிருக்கிறார்.
இதை கேட்ட இசைஞானி இதென்ன ஒரே செக்ஸியாக இருக்கிறது நான் பாட மாட்டேனு சொன்னாராம். பிறகு விளக்கு வைச்ச நேரத்துல தன்னானனா என்று பாடியிருக்கிறார். இதை கேட்ட பாக்யராஜ் முழுவதுமாக பாடினால் கூட அதில் ஒன்றுமிருக்காது. நீங்கள் பாடின மாறி தன்னானனா என்று பாடினால் தான் ரசிகர்கள் வேற மாறி நினைப்பார்கள் என்று சொல்லி சிரித்தாராம்.