கங்கை அமரனை நூதனமாக படத்தில் இருந்து தூக்கிய பாக்கியராஜ்! – ஆனாலும் உதவிய கங்கை அமரன்..

by Rajkumar |   ( Updated:2023-03-25 09:29:55  )
gangai amaran 1
X

gangai amaran 1

பாடல் ஆசிரியராக அறிமுகமாகி பிறகு இசையமைப்பாளர், இயக்குனர் என பெரும் உயரங்களை தொட்டவர் கங்கை அமரன். அவர் தொட்ட துறைகளில் எல்லாம் பெரும் ஹிட் கொடுத்தவர் கங்கை அமரன். இயக்குனர் பாக்கியராஜ் இயக்கிய முதல் படமான சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்திற்கு கங்கை அமரனே இசையமைத்தார்.

அந்த பட பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்தன. எனவே இனி பாக்கியராஜ் இயக்கும் அனைத்து படங்களுக்கும் கங்கை அமரனே இசையமைக்க வேண்டும் என கங்கை அமரனிடம் கேட்டுக்கொண்டார் பாக்கியராஜ். அதற்கு பிறகு முந்தானை முடிச்சி படம் தயாரானது. அந்த படத்திற்கும் கங்கை அமரனையே இசையமைக்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

bhakyaraj

bhakyaraj

படத்திற்கான போஸ்டர்களும் வெளியாகின. போஸ்டரில் இசை கங்கை அமரன் என அச்சிடப்பட்டது. அப்போது பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு எல்லாம் இளையராஜாதான் இசையமைத்து வந்தார். மேலும் இளையராஜாவிற்காகவே திரையரங்குக்கு வரும் ரசிகர்களும் இருந்தனர்.

இளையராஜாவிடம் சென்ற பாக்கியராஜ்:

எனவே இந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க வைக்கலாம் என முடிவு செய்தனர். இதுக்குறித்து கங்கை அமரனிடம் சென்று கூறினர். ஆனால் கங்கை அமரன் கோபப்படவே இல்லை. சரி பரவாயில்லை என் அண்ணன் என்னை விட நன்றாகவே இசையமைப்பார் என கூறியுள்ளார்.

bhagyaraj

bhagyaraj

ஆனால் இளையராஜா இதற்கு சம்மதிக்கவில்லை “போஸ்டர் எல்லாம் வெளியிட்டுட்டிங்க.. தம்பி படத்தை அண்ணன் திருடிட்டான்னு பத்திரிக்கை காரங்க பேசமாட்டாங்களா?” என கூறி அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு கங்கை அமரனே வந்து பேசியப்பிறகு ஒரு நிபந்தனையுடன் இளையராஜா ஒப்புக்கொண்டார்.

அதாவது படத்தின் பாடல் வரிகளை கங்கை அமரன்தான் எழுத வேண்டும் என்பதே நிபந்தனை. அதற்கு ஒப்புக்கொண்ட படக்குழு அதற்கு பிறகும் மூன்று பாடல்களுக்கு மட்டுமே கங்கை அமரனை பாடல் எழுத அனுமதித்துள்ளது. இதை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Next Story