ப்ளீஸ் ஒரு வாய்ப்பு கொடுங்க!.. நொந்துபோன செந்தாமரையை தூக்கிவிட்ட பாக்கியராஜ்...
திரைத்துறையில் வாய்ப்பு என்பது அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடாது. பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்களின் வாரிசு எனில் வாய்ப்பு சுலபமாக கிடைக்கும். அல்லது அவர்கள் பரிந்துரையின் பேரில் வாய்ப்புகள் கிடைக்கும். எந்த பின்புலமும் இல்லையெனில், திறமை இருந்தாலும் வாய்ப்புகள் கிடைக்காது.
அப்படி சிறப்பாக நடிக்க திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போன பல கலைஞர்கள் இருக்கிறார்கள். யாராவது ஒருவர் வாய்ப்பு கொடுத்திருந்தால் அவர்களின் வாழ்க்கை மாறியிருக்கும். சினிமாவில் பல வருடங்களாக கூட்டத்தில் நிற்கும் துணை நடிகர்களாகவே சிலர் இருப்பார்கள். சரியான வாய்ப்பு கிடைக்காமலும், வேறு வேலையை செய்ய முடியாமலும் அதிலேயே காலத்தை தள்ளிவிடுவார்கள்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கருப்பு வெள்ளை திரைப்படங்களிலேயே கூட்டத்தில் ஒருவராக பல படங்களில் நடித்தவர் செந்தாமரை. ஆனால், அவருக்கு யாரும் சரியான வாய்ப்புகள் கொடுக்கவில்லை. எனவே, அவர் மிகவும் நொந்துபோயிருந்தார். அப்போதுதான் அவர் பாக்கியராஜை சந்தித்து ‘நான் மிகவும் நன்றாக நடிப்பேன். எனக்கு கூட்டத்தில் நிற்கும் வேடத்தையே எல்லோரும் தருகிறார்கள்.. நீங்களாவது எனக்கு நல்ல வாய்ப்பு கொடுங்கள்’ என கெஞ்சி கேட்டுள்ளார். அவரை காத்திருக்க சொன்ன பாக்கியராஜ் தான் இயக்கி நடித்த ‘தூரல் நின்னு போச்சு’ படத்தில் கதாநாயகியின் அப்பாவாக நடிக்க வைத்தார்.
ஒரு கிராமத்து மனிதர், கண்டிப்பான அப்பா, கௌரவத்தை விட்டு கொடுக்காத மனிதர் என அந்த கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை கொடுத்து ரசிகர்களை மிரளவைத்தார் செந்தாமரை. அதன்பின் அவரின் மார்க்கெட் ஏறுமுகம்தான். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் ரஜினிக்கு வில்லனாக கூட நடிக்கும் அளவுக்கு செந்தாமரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உன்ன பாத்தாலே மூடு தாறுமாறா ஏறுது!.. ஓப்பனா காட்டி உருகவைக்கும் ஐஸ்வர்யா தத்தா