அஜித்திற்கே தெரியாமல் பாக்யராஜ் செய்த அந்த உதவி...! நூலிழையில் காப்பாற்றிய சம்பவம்..!
தமிழ் சினிமாவில் மாஸான ஹீரோனா எப்பொழுதும் இப்பொழுதும் நம்ம தல அஜித் தான். சினிமா மட்டுமில்லாமல் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருபவர். ஆனால் அவர் செய்யும் பல உதவிகள் வெளியே வராமல் பார்த்துக் கொள்கிறார். யாரைப் பற்றியும் குறை கூறாதவர்.
தன் தொழிலையே நம்பி இருப்பவர். தொழில் பக்தி அதிகம் உடையவர். இவர் முதன் முதலில் சினிமாவிற்குள் நுழைந்தது ஒரு தெலுங்கு சினிமா மூலம் தான். 1992 ல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். அஜித் ஹீரோவாக நடித்த முதல் படம் இதுதான்.
ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே இந்த படத்தின் இயக்குனர் திடீரென இறந்துவிட படம் பாதியிலயே நின்று விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நிலையில் இந்த இயக்குனரின் அப்பாவும் நடிகர் பாக்யராஜும் நண்பர்களாக இருந்ததினால் பிரேம புஸ்தகம் ஸ்கிரிப்டை பாக்யராஜிடம் கொடுத்து இதற்கு மேல் கதை எப்படி போகும் என ஒரு ஐடியாவும் இல்லை என தெரிவித்தனராம்.
பாக்யராஜ் முழு ஸ்கிரிப்டையும் படித்து பார்த்து மீதி ஸ்கிரிப்டில் படத்தை முடிக்க பாக்யராஜ் உதவி செய்ததாக பாக்யராஜே தெரிவித்தார். படமும் நல்ல படியாக ஓடி வரவேற்பை பெற்றது. இந்த விஷயம் அஜித்திற்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இன்று ஒட்டு மொத்த சினிமாவே தல என்று போற்றப்படும் பெருமைக்குரிய அஜித்தின் முதல் படத்திற்கு என்னால முடிஞ்ச உதவியை செய்தேன் என்று நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என பெருந்தன்மையாக கூறினார்.