அஜித் முதல் படத்துக்கு நான்தான் ஹெல்ப் பண்ணேன்.. அவருக்கே தெரியாது.. ரகசியும் சொன்ன பாக்கியராஜ்..
சினிமா உலகில் பல விஷயங்கள் வெளியே தெரியாமல் இருக்கும். பல வருடங்கள் கழித்து கேள்விப்படும்போது இப்படியெல்லாம் நடந்ததா என மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். பல விஷயங்கள் வெளியே தெரியாமலே கூட போய்விடும். சம்பந்தப்பட்டவர் வெளியே சொன்னால்தான் நமக்கு தெரியவரும்.
அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்து, பின் ஸ்டைலீஸ் ஹீரோவாக மாறி தற்போது மாஸ் ஹீரோவாக மாறியிருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் இவரால் ஒரு சரியான இடத்தை பிடிக்க முடியவில்லை. ரசிகர்கள் கூட இவருக்கு உருவாகவில்லை. இவர் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்து வந்தது.
அப்போதுதான் அவர் நடிப்பில் வெளிவந்த பில்லா திரைப்படம் அவருக்கு கை கொடுத்தது. அதன்பின் தொடர்ந்து ஹிட் படங்களில் நடிக்க துவங்கினார். மங்காத்தா திரைப்படத்தின் வெற்றி பல தயாரிப்பாளர்களையும் அவர் பக்கம் திரும்ப வைத்தது. தற்போது மாஸ் ஹீரோவாக உயர்ந்துள்ளார். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
அஜித் ஒரு தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. உண்மையில் அதுதான் அஜித்தின் முதல் திரைப்படம். அப்படத்தின் பெயர் பிரேம புஸ்தகம். இப்படத்தை மாருதி ராவ் என்பவர் இயக்கியிருந்தார்.. இப்படம் 1993ம் ஆண்டு வெளியானது. இப்படம் உருவாகி கொண்டிருந்த நேர்த்தில் இயக்குனர் ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.
இப்படத்தின் தயாரிப்பாளருக்கு பாக்கியராஜை தெரியும் என்பதால், அவர் பாக்கியராஜை அழைத்து ‘படத்தை எடுத்தவரை பாருங்கள் இப்படத்திற்கு என்ன கிளைமேக்ஸ் இயக்குனர் யோசித்து வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. நீங்கள் படம் பார்த்து உங்கள் ஐடியாவை சொல்லுங்கள்’ என உதவி கேட்டாராம். பாக்கியராஜும் அப்படியே செய்து கொடுத்தாராம். இந்த தகவலை ஒரு யுடியூப் சேனலில் தெரிவித்துள்ள பாக்கியராஜ் இது அஜித்துக்கு தெரியுமா என்பதே எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.
தமிழில் அமராவதி வெளியாகி 2 மாதங்கள் கழித்தே அவரின் முதல் படமான ‘பிரேம புத்தகம்’ தெலுங்கில் வெளியானது. இப்படம் தமிழில் காதல் புத்தகம் என்கிற பெயரில் டப் செய்யப்பட்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘கனெக்ட்’ படத்தால் நயனுக்கு வந்த சோதனை!.. மதுரை புள்ளிங்கோ காட்டிய ஆட்டத்தால் நடுங்கிய மதுரை அன்பு..