எம்.ஜி.ஆரை அழ வைத்த பாக்யராஜ் குடும்பம்...! பின்னனியில் நடந்த சம்பவத்தால் ஆடிப்போன வேலையாட்கள்...!
தமிழ் சினிமாவில் உன்னதமான நடிகராகவும் அரசியலில் தலைசிறந்த தலைவராகவும் விளங்கியவர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். இவர் அரசியலுக்கு வந்த பிறகும் சினிமா கலைஞர்களுக்கு தன்னால் முடிந்த வரை தேவையான உதவிகளை செய்து வந்தார். அந்த வகையில் எம்.ஜி.ஆரால் சினிமாவில் மிகவும் ஈர்க்கப்பட்டவர் நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ்.
எம்.ஜி.ஆருடன் இவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் இவரை சினிமாவின் கலைவாரிசு என்ற பட்டத்தை வாங்கவைத்தது. அந்த பட்டத்தை கொடுத்தவரே எம்.ஜி.ஆர் தானாம். ஒரு சமயம் அவருடைய மகன் சாந்தனுவின் முதல் பிறந்த நாளன்று எம்.ஜி.ஆரை பார்த்து வாழ்த்து பெறுவதற்காக குடும்பத்தாருடன் சென்றிருந்தார் பாக்யராஜ்.
கீழே காத்திருந்த பாக்யராஜ் ஹாலில் மாட்டப்பட்ட எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை காட்டி அவரது மூன்று வயது மகளிடம் கேட்டாராம். உடனே எம்.ஜி.ஆர் தாத்தா என்று சொன்னாளாம் அவரது மகள். அதைக் கேட்ட எம்.ஜி.ஆரின் செக்ரட்டரி ஐய்யயோ இப்படி எல்லாம் சொல்லக்கூடாது. எம்.ஜி.ஆர் மாமா என்று தான் சொல்லவேண்டும். எம்.ஜி.ஆருக்கும் பிடிக்காது. மேலும் எம்.ஜி.ஆர் வரும்போது தாத்தானு கூப்பிடாம பாத்துக்கோங்கனு சொல்லிவிட்டு போய் விட்டாராம்.
எம்.ஜி.ஆர் வந்ததும் பாக்யராஜின் மகள் ஐ..எம்.ஜி.ஆர் தாத்தானு கத்தி சொன்னது, அதை கேட்ட எம்.ஜி.ஆர் தன் இரு கைகளால் பாக்யராஜின் மகளை அரவணைத்து கொஞ்சினாராம். கூடவே அவரது கண்களும் கலங்கி இருந்ததாம். இதை பார்த்த அருகில் இருந்த வேலையாட்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்களாம். சாந்தனுக்காக செயின் போட நினைத்த எம்.ஜி.ஆர் மகளையும் பார்த்து பாக்யராஜின் மகளுக்கும் சேர்த்து இரண்டு செயின்களை போட்டாராம். இதை ஒரு மேடையில் பாக்யராஜே தெரிவித்தார்.