நடிகைகள் பத்தி நீங்க சொல்றது உண்மையில்லை.. ராதிகாவின் பேச்சால் ஆவேசமான பாக்கியராஜ்!..

Published on: June 19, 2023
---Advertisement---

தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்த முக்கியமான இயக்குனர்களில் நடிகர் பாக்கியராஜும் ஒருவர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாக்கியராஜ் சிறிது காலத்திற்குப் பிறகு தனியாக படம் எடுக்க துவங்கினார்.

பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்களில் அவரே கதாநாயகனாக நடித்தார். இப்படியாக இயக்கப்பட்ட திரைப்படங்கள் அதிகபட்சம் குடும்ப திரைப்படங்களாகவே இருந்தன. குடும்ப சூழலில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி கூறும் படங்களாக அவை இருந்தன.

bhagyaraj
bhagyaraj

இதனால் அனைத்து மக்களுக்கும் பிடித்த நாயகராக பாக்கியராஜ் இருந்தார் அவருடைய தாவணி கனவுகள், இது நம்ம ஆளு, முந்தானை முடிச்சு போன்ற திரைப்படங்கள் அப்போது வெகுவாக பாராட்டையும் வெற்றியையும் பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

தற்சமயம் சினிமாவில் படங்கள் எதுவும் இயக்க முடியாததால் பாக்கியராஜ் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு துப்பறிவாளன் மாதிரியான சில படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்சமயம் யூ ட்யூப் சேனல் ஆரம்பித்து நடத்தி வருகிறார் பாக்கியராஜ்.

பதிலளித்த பாக்கியராஜ்:

சமீபத்தில் பாக்கியராஜ் ஒரு சினிமா நிகழ்வில் கலந்து கொண்ட பொழுது அந்த நிகழ்வில் நடிகை ராதிகாவும் கலந்து கொண்டிருந்தார். ராதிகா நடிகைகள் குறித்து பேசும்பொழுது நடிகைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதாக மரியாதையே இல்லை என்பதாக பேசி இருந்தார்.

bhagyaraj
bhagyaraj

இதற்கு பதில் பதில் அளித்த பாக்கியராஜ் கூறும்போது தமிழ் சினிமாவில் இருந்து வந்து பெரும் முதலமைச்சரானவர்தான் ஜெயலலிதா அவர்கள். அதே போல சினிமா ரசிகர்கள் குஷ்புவிற்கு கோவில் கட்டி உள்ளனர்.. நடிகை ரோஜாவும் கூட தற்சமயம் அரசியலில் நல்ல இடத்தில் இருக்கிறார் எனவே தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு மரியாதை இல்லை என்று கூறாதீர்கள் என்று அறிவுரை கூறியிருந்தார் பாக்கியராஜ்.

இதையும் படிங்க: எனக்கு வாழ்க்கை கொடுத்ததே கேப்டன்! எத சொல்றாரு? சரத்குமாருக்காக விஜயகாந்த செய்த மாஸ் சம்பவம்

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.