பாக்யராஜை பந்தாடிய சிவாஜியும் எம்.ஜி.ஆரும்!.. நடுவுல மாட்டிக்கிட்டு தலையை பிச்சுக்கிட்ட சம்பவம்!..
எந்த ஒரு இயக்குனருக்கும் இருக்கிற பெரிய கனவு எப்படியாவது நம் எடுக்க போகும் படத்தில் அந்த நிலையில் இருக்கும் பெரிய ஹீரொவை வைத்து படம் எடுத்துவிட வேண்டும் என்ற ஆசை அனைத்து இயக்குனர் மத்தியிலும் இருக்கும்.
அந்த வகையில் இயக்குனர் பாக்யராஜ் எப்படியாவது நடிகர் திலகம் சிவாஜியை இயக்கிவிட வேண்டும் என்ற ஆசையில் அவர் எடுத்த படம் தான் தாவணி கனவுகள். இந்த படத்தில் சிவாஜி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். ஹீரோவாக பாக்யராஜும் ஹீரோயினாக ராதிகாவும் நடித்து படம் மாபெரும் வெற்றி பெற்றது.
படத்தின் ப்ரீவ்யூவை ரிலீஸுக்கு முதல் நாளில் சிவாஜிகணேசனுக்கும் அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் போட்டுக் காட்ட நினைத்தார் பாக்யராஜ். இருவரும் சம்மதித்து சிவாஜியை 3மணி அளவிலும் எம்.ஜி.ஆரை 6மணி அளவிலும் வர சொல்லியிருக்கிறார். அப்பொழுது தான் இருவரையும் வரவேற்க சரியாக இருக்கும் என நினைத்து ஏற்பாடு செய்திருக்கிறார் பாக்யராஜ்.
ஆனால் சிவாஜிக்கும் இருந்த முக்கிய வேலையால் நான் 6 மணி ஷோவில் பார்க்கிறேன் என சொல்ல பாக்யராஜ் என்னசெய்வதென்று தெரியாமல் வேறுவழியின்றி சிவாஜியை பூர்ணிமாவை வைத்து வரவேற்க சொல்லிவிட்டு எம்.ஜி.ஆரை பாக்யாராஜ் வரவேற்க சென்றுவிட்டார். ஆனால் இருவருக்கும் வெவ்வேறான இடங்களில் படத்தை போட்டு காட்ட முடிவு செய்திருந்தார் பாக்யராஜ்.
எம்.ஜி.ஆருடன் இடைவேளை வரை இருந்து இடைவேளைக்கு பிறகு ஒரு பிரிண்ட் டெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கிறது என பொய் சொல்லி சிவாஜியை பார்க்க நினைத்த பாக்யராஜை மடக்கி பொய் சொல்லாதே எங்கே போகிறாய் என எம்.ஜி.ஆர் கேட்க நடந்ததை சொல்லியிருக்கிறார் பாக்யராஜ். உடனே எம்.ஜி.ஆர் உனக்கு அறிவில்ல? படத்தின் ஹீரோவே அவர் தான். நீ அவருடன் தான் இருக்கனும்னு சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் அங்கு போனதும் சிவாஜிக்கு ஏற்கெனவே எல்லாம் தெரியவர பாக்யராஜை பார்த்ததும் என்னை நாளைக்கு வேண்டுமென்றால் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர் நம் முதல்வர் அவருக்கு தான் நீ முதல் மரியாதை கொடுக்கனும்னு ஆளாளுக்கு பந்தாடியிருக்கின்றனர். இதற்கிடையில் சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமை பாராட்டுக்குரியதாக தெரிகிறது. இதை இப்ப உள்ள தலைமுறைகள் பின்பற்றுகிறார்களா?