முந்தானை முடிச்சி தலைப்புக்கு இப்படி ஒரு பிரச்சனையா?- ஸ்மார்ட்டா சமாளிச்ச பாக்கியராஜ்

by சிவா |   ( Updated:2023-06-07 15:24:08  )
munthanai
X

பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து நடிகர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களை எடுத்தவர் பாக்கியராஜ். முதலில் இவர் கதாசிரியராகத்தான் இருந்தார். பாரதிராஜாதான் இவரை நடிகராக மாற்றினார். துவக்கத்தில் தனது சொந்த குரலில் கூட பாக்கியராஜ் பேசவில்லை. ஆனால், படப்படியாக பல படங்களை இயக்கி நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறியவர் இவர்.

munthanai

குறிப்பாக அப்பாவி கணவன் கதாபாத்திரங்களில் நடித்து பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக மாறினார். இவர் இயக்கி நடித்த தூரல் நின்னு போச்சி, தாவணி கனவுகள், அந்த ஏழு நாட்கள், சின்ன வீடு, எங்க சின்ன ராசு, முந்தானை முடிச்சி உள்ளிட்ட பல படங்கள் 100 நாட்களுக்கும் மேல் ஓடியது.

ஏவிஎம் தயாரிப்பில் பாக்கியராஜ் இயக்கி நடித்து 1983ம் வருடம் வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சி. இந்த படம் உருவானபோது ஒரு சிக்கலை படக்குழு சந்தித்தது. அதாவது படத்தின் தலைப்பு எட்டு எழுத்தாக இருந்தால் அது ஓடாது என்கிற செண்டிமெண்ட் அப்போது இருந்தது. எட்டு எழுத்தில் தலைப்பு கொண்டு வெளியான சில படங்கள் தோல்வி அடைந்ததால் இந்த செண்டிமெண்ட் அப்போது உருவானது.

munthanai

அதன்பின்னர்தான் தலைப்பை மாற்றாமல் எழுத்து சுருக்கப்பட்டது. அதாவது ‘முந்தானை முடிச்சி’ என்கிற வார்த்தையில் ‘மு’ ஒரு மட்டுமே வருமாறு அதை பெரிதாக மாற்றி மேலும், கீழும் ஒரே எழுத்தாக பயன்படுத்தி இருப்பார்கள். அதனால் அது ஏழு வார்த்தையாக மாறியது.

எப்படியெல்லாம் யோச்சிருக்காங்க..

Next Story