எனக்கு வாசிக்கவே தெரியாது ஆனாலும் நான் இசையமைப்பாளர் தான்.! இப்படியா உண்மையை டக்குனு சொல்வது.?!
ஒரு காலத்தில் திரைக்கதை மன்னன் என பெயரெடுத்தவர் பாக்யராஜ். தற்போதும் கூட வெளிநாட்டு திரைப்பட எழுத்தாளர்கள் கூட அவரிடம் யோசனை கேட்டுத்தான் வருகின்றனர். அந்தளவுக்கு தன்னுடைய எளிமையான திரைக்கதை மூலம் ரசிகர்களுக்கு தன்னுடைய படைப்பை கடத்தி சென்றவர் பாக்யராஜ்.
இவருக்கும் இவரது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் ஏற்பட்ட சிறிய மனக்கசப்பினால், அவருடன் சேர்ந்து பணியாற்றாமல் இருந்தார். அப்போது அவரது இது நம்ம ஆளு திரைப்படத்தில் தானே இசையமைத்து இசையமைப்பாளராகவும் நல்ல பாடல்களை கொடுத்தார்.
அது பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், எனக்கு இசை கேள்வி ஞானம் தான். இசை கருவிகள் வாசிக்க தெரியாது. வாயாலே ஹம்மிங் கொடுத்து அதனை ரெகார்ட் செய்து, நண்பர் உதவியுடன் இசை கோர்ப்புகளை சேர்த்து பாடல்வரிகளுக்கு ஏற்ப இசையமைத்து விடுவேன். அவ்வளவுதான். என வெளிப்படையாக தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அப்படி, இது நம்ம ஆளு, பவுனு பவுனுதான், அராராரோ ஆரிராரோ, அவரச போலீஸ் 100, ஞானப்பழம் என பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து வெற்றிவாகை சூடியுள்ளார்.