Connect with us
K.Bhagyaraj

Cinema News

ஹீரோவாக நடிக்க பாக்யராஜ் செய்த பயங்கர காரியம்… இப்படி எல்லாமா மெனக்கெடுறது?

திரைக்கதை மன்னன் என்று போற்றப்படும் கே.பாக்யராஜ், தொடக்கத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். “16 வயதினிலே”, “கிழக்கே போகும் ரயில்” போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய பாக்யராஜ், “சிகப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தின் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

K.Bhagyaraj

K.Bhagyaraj

இதனை தொடர்ந்து “புதிய வார்ப்புகள்” திரைப்படத்தில் பாரதிராஜா, பாக்யராஜ்ஜை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து பாக்யராஜ் தனியாக படம் இயக்க முடிவு செய்தார். அதன்படி “சுவரில்லா சித்திரம்” என்ற திரைப்படத்தின் கதையை தயார் செய்தார். அத்திரைப்படத்திற்கான கதாநாயக தேடலில் ஈடுபட்டார் பாக்யராஜ்.

ஆனால் யாருமே அத்திரைப்படத்தில் நடிக்க செட் ஆகவில்லை. இதனை தொடர்ந்து தானே அத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தார் பாக்யராஜ். எனினும் அவருக்கு மிகப் பெரிய தயக்கம் இருந்ததாம்.

Suvarilladha Sithirangal

Suvarilladha Sithirangal

இதனை தொடர்ந்து தன்னுடைய மைன்ஸ்கள் என்னென்ன என்று ஒரு பேப்பரில் எழுதினாராம். அதே போல் தன்னுடைய பிளஸ்கள் என்னென்ன என்றும் அந்த பேப்பரில் எழுதினாராம். இவ்வாறு தனது பிளஸ்கள் மற்றும் மைனஸ்கள் பற்றி அலசினாராம் பாக்யராஜ். அதன் பிறகுதான் ஹீரோவாக நடிப்பதற்காக இருந்த தயக்கம் போனதாம்.

இது குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள பாக்யராஜ், “என்னுடைய பலவீனத்தை அறியாத ஒரு நபராக இருந்திருந்தேன் என்றால் நிச்சயமாக நான் பெற்ற வெற்றிகளை என்னால் அடைந்திருக்கவே முடியாது என்பதுதான் உண்மை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொடூர விபத்தில் சிக்கிய ஜனகராஜ்… பிரபல காமெடி நடிகருக்கு வந்த அரிய வாய்ப்பு… ஆனால் சோகம் என்னன்னா?

google news
Continue Reading

More in Cinema News

To Top