bakki
முருங்கைக்காய் என்றாலே நம் அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது நடிகர் பாக்யராஜ். முருங்கைக்காயில் இவ்ளோ மேட்டர் இருக்கிறதா என்பதை இந்த உலகுக்கு புரிய வைத்தவர். அதுவும் முந்தானை முடிச்சு படத்தில்தான் முருங்கைக்காய் கான்சப்ட்டையே கொண்டு வந்தார். அந்தப் படத்தின் மூலம் தான் நடிகை ஊர்வசி தமிழில் அறிமுகமானார். அப்போது ஊர்வசிக்கும் வயது 13.
ஆனால் ஊர்வசிக்கு முன்பு அந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் ஊர்வசியின் மூத்த அக்காதானாம். பாக்யராஜை பார்க்க தன் அக்காவுடன் வந்த ஊர்வசி வாய் துருதுருனு அப்போதே பேசிக் கொண்டிருந்தாராம். அது பிடிக்க போய்தான் முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசியை ஹீரோயினாக அறிமுகம் செய்திருக்கிறார்.
இப்போது ஊர்வசி தமிழில் அவ்வளவு படங்கள் பண்ணவில்லை என்றாலும் மலையாளத்தில் அவருக்கு என தனி மார்கெட் இப்போது வரை இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் பாக்யராஜுக்கு 50வருட விழா கொண்டாடப்பட்டது. அதனால் பாக்யராஜுடன் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டனர். அதில் ஊர்வசியும் கலந்து கொண்டார். மேடையில் ஏறிய ஊர்வசிக்கு பரிசாக பாக்யராஜ் முருங்கைக்காயை கொடுத்தார்.
அதை பார்த்ததும் கீழே இருந்த அனைவரும் சிரித்து விட்டனர். ஆனால் அந்த முருங்கைக்காயை பார்த்ததும் ஊர்வசி, ‘சார் இந்த முருங்கைக்காயில் ஒன்னுமே இல்ல சார். முந்தானை முடிச்சு படத்தில் அந்த சீன்லாம் இருக்கும். ஆனால் நிஜத்தில் அப்படியெல்லாம் இல்லை சார்’ என பாக்யராஜுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் பாக்யராஜ், ‘உனக்கு வொர்க் அவுட் ஆகலைனா என்ன? மத்தவங்களுக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கும்’ என நக்கலாக பதில் சொன்னார்.
சரி. உண்மைனு உங்களுக்கு எப்படி தெரியும் என ஊர்வசி கேட்க அதற்கு ஒரு பிளாஷ்பேக்கை சொன்னார் பாக்யராஜ். அதாவது பாக்யராஜ் சிறு வயதாக இருக்கும் போது அவருடைய பாட்டி அசைவ உணவு சமைத்தால் இவருக்கு கறி, கோழி என நிறைய பீஸுகளை எடுத்து வைப்பாராம். ஆனால் முருங்கைக்காய் குழம்பு வைக்கும் போது மட்டும் பாக்யராஜின் மாமாக்களுக்கு நிறைய முருங்கைக்காய்களை வைப்பாராம்.
பாக்யராஜுக்கு ஒரு காய் மட்டும் வைத்து மீதி குழம்பை ஊற்றுவாராம். ஏன் பாட்டி, ஒரு காய் வைக்குற? கூட கொஞ்சம் வேணும் என்று கேட்டால் பாட்டி வைக்கவே மாட்டாராம். இது ஏன் என தெரிந்து கொள்ள தன் மூத்த வயதுடைய நண்பரிடம் கேட்டிருக்கிறார் பாக்யராஜ். அப்போதுதான் கல்யாணம் பண்ணவங்க இத நிறைய சாப்பிடணும். நீயெல்லாம் நிறைய சாப்பிடக் கூடாது என்று கூறினாராம். இதை வைத்துதான் முந்தானை முடிச்சு படத்தில் அப்படியொரு கான்சப்ட்டை வைத்ததாக பாக்யராஜ் கூறினார்.
நடிகர் ஜீவா…
இந்த பொங்கல்…
சுதாகொங்கரா இயக்கத்தில்…
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…