பாக்கியராஜை பழிவாங்கிய சிவாஜி!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா?!...
Sivaji Ganesan: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு சிறந்த நடிகர் என்பதுதான் ரசிகர்களுக்கு தெரியும். ஏனெனில், திரையில் அவர்கள் பார்ப்பது சிவாஜியின் நடிப்பை மட்டுமே. ஆனால், திரைக்கு பின்னால் அவர் எவ்வளவு ஜாலியானவர் என்பது பலருக்கும் தெரியாது. அது அவர் நடிக்கும் படங்களின் இயக்குனர்கள் மற்றும் அந்த படத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
கேமரா முன்பு மட்டுமே அவர் சீரியஸாக நடிப்பார். மற்றபடி அவர் ஒரு குழந்தை போல என பலரும் சொல்வார்கள். நடிப்பை பற்றி கரைத்து குடித்தவர் அவர். அதற்கு அவருக்கு உதவியாக இருந்தது பல வருட நாடக அனுபவம்தான். நாடகங்களில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து அனுபவம் பெற்றிருக்கிறார்.
இதையும் படிங்க: அப்பவே சிவாஜி படத்துல ரெண்டு கிளைமேக்ஸ்!.. அது மட்டும் வந்திருந்தா செம ஹிட்டு!..
பல முறை பெண் வேடத்திலும் கலக்கி இருக்கிறார். சினிமாவில் நடிப்பில் சிவாஜி தொட்டது உச்சம். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லலாம். அதனால்தான் அவருக்கு பின்னால் நடிக்க வந்த நடிகர்கள் பலரும் அவரைப்போலவே நடிக்க முயற்சிகள் செய்தார்கள்.
சிவாஜிக்கு ஒரு பழக்கம் உண்டு. படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். அதுவும் ‘காலை 7 மணிக்கு வந்துவிடுங்கள்’ என இயக்குனர் சொல்லிவிட்டால் 6.30 மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருப்பார். ஏனெனில், தயாரிப்பாளருக்கு நம்மால் சிக்கல் வந்துவிடக்கூடாது என நினைப்பார். கடைசிவரை அதை கடைபிடித்தார்.
இந்நிலையில், இதுபற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் பகிர்ந்துள்ளார். தாவணிக் கனவுகள் படத்தில் சிவாஜி அண்ணனை நடிக்க வைத்தேன். ஒருநாள் காலை 7.30 மணிக்கு அவரை வர சொல்லி இருந்தேன். ஆனால், 7.27 மணிக்கே படப்பிடிப்பை துவங்கிவிட்டேன்.
அப்போது என்னிடம் வந்த சிவாஜி ‘நீ என்னை 7.30 மணிக்கு வர சொல்லிட்டு அதுக்கு முன்னாடியே ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடா பாக்கியராஜ் முன்னாடியே வந்துட்டார்... சிவாஜி லேட்டா வந்தார்னு இங்கு இருக்க எல்லாரும் என்னை பத்தி தப்பா நினைக்க மாட்டான். என்ன வச்சிதான நீ முதல் ஷாட் எடுக்கணும்’ என கத்தினார்.
அடுத்தநாள் அதேபோல் அவரை காலை 7.30 மணிக்கு வர சொன்னேன். அவரோ 7 மணிக்கே மேக்கப்போடு தயாராக வந்து உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.. எனக்கு முன்பே அவர் போய்விட்டது கேள்விப்பட்டு வேகமாக ஓடிவந்தேன். ‘ஏன் சீக்கிரம் வந்துட்டீங்க?’ என அவரிடம் கேட்டபோது ‘நான் உன்னை பழிவாங்கிட்டேன். நேத்து நான் லேட்டா வந்தாமாதிரி நீ பண்ணல்ல.. அதான், இன்னைக்கு சிவாஜி சீக்கிரம் வந்திட்டார். பாக்கியராஜிதான் லேட்டுனு எல்லாரும் பேசுவாங்க’ என சொன்னார். அவர் ஒரு குழந்தை போல’ என் பாக்கியராஜ் பேசினார்.
இதையும் படிங்க: சிவாஜிக்கு சொன்ன கதையை ஆட்டய போட்ட எம்.ஜி.ஆர்!.. அது சூப்பர் ஹிட் படமாச்சே!…