
Cinema News
பாக்யராஜ் மகனை இப்படி வச்சி செஞ்சுட்டாங்களே.! பதறி போய் சரண்டர் ஆயிட்டார்.! பின்னணி இதோ..
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் அளவுக்கு மிகபெரிய ஜாம்பவான். பொதுவெளியில் பேச பயப்படும் பல சமாச்சாரங்களை சாதுர்யமாக கையாண்டு திரையில் வெற்றிகண்டவர் பாக்கியராஜ். இவரது மகன் சாந்தனு சிறு வயது முதலே சினிமா துறையில் நடித்து வருகிறார்.
இவர் இருந்த வேகத்துக்கு , சரியான கதை தேர்வு அமைந்து இருந்தால் இந்நேரம் தமிழ் சினிமாவில் ஓர் நல்ல ஹீரோவாக வலம் வந்து இருப்பார். ஆனால், சரியான நேரம் அமையதனாலோ என்னவோ இன்னும் தடுமாறி கொண்டிருக்கிறார்.
இருந்தாலும் இவர் இன்னும் ரசிகர்களிடம் எப்போதும் டச்சில் தான் இருப்பார். ஏனென்றால் இவர் எப்போதும் இணையத்தில் டச்சில் தான் இருப்பார். இவரும் இவர் காதல் மனைவி கீகீ விஜயும் ஜோடியாக ரீல்ஸ் போட்டால் ரசிப்பதற்கு ரசிகர்கள் லட்சக்கணக்கோர் இருக்கின்றனர்.
இவர்களது பெரிய சொத்தாக கருதப்படும் அந்த றீல்ஸ் குடோன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ சில விஷமிகள் ஹேக் செய்துவிட்டனராம். இதனை கண்டு சாந்தனு அதிர்ந்து போயுள்ளார்.
இதையும் படியுங்களேன் – பங்கமாய் அரசியல் பேசிய ஆண்டவர்.! உதயநிதிக்கு தெரிஞ்சா கோவிச்சிக்க போறார்.!
இதனால், வேறு ஏதும் பிரச்சனை தன் பெயரில் வந்துவிட கூடாது என்பதால், உடனடியாக சரண்டர் ஆகிவிட்டார். தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்கில் , ‘ எனது அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டது. அதனால், யாரும் எனது இன்ஸ்டா பக்கத்துக்கு வந்து எதுவும் ரெஸ்பான்ஸ் செய்ய வேண்டாம் ‘ என கூறிவிட்டார்.
பிரபலங்களின் இணைய கணக்கு, அதுவும் குறிப்பாக இன்ஸ்ட்டா கணக்கு அடிக்கடி ஹேக் செய்யப்படுவது சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேணும் என்பதே கோரிக்கையாக வலுத்து வருகிறது.
My INSTAGRAM ACCOUNT with a VERIFIED BADGE has been HACKED !! Please DO NOT RESPOND TO ANYTHING FROM THAT PROFILE until FURTHER NOTICE !
Thank you— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) May 12, 2022