சாந்தனுவிற்கு வந்த வாய்ப்பை கெடுத்த பாக்கியராஜ்.. சொந்த மகனுக்கே சூனியம் வச்சிட்டிங்களே!..

1979 ஆம் ஆண்டு வந்த சுவரில்லா சித்திரங்கள் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாக்கியராஜ். அதற்கு முன்பு பாரதிராஜா திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அதன் பிறகு இயக்குனராக அவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும் ஹிட் கொடுத்தன.
அதன் பிறகு பாக்கியராஜே கதாநாயகனாக களம் இறங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த தூரல் நின்னு போச்சு, தாவணி கனவுகள், முந்தானை முடிச்சி போன்ற திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து அப்போது இருந்த பிரபலங்களில் பெரும் செல்வாக்கு மிகுந்த நடிகராக பாக்கியராஜ் இருந்தார்.

bhagyaraj
ஆனால் அடுத்த தலைமுறை சினிமாவில் தொடர்ந்து பாக்கியராஜால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அவர் இயக்கிய ஞானப்பழம், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, போன்ற படங்கள் வரிசையாக தொடர் தோல்வியை கொடுத்தது. இதனால் படங்களை இயக்குவதில் இருந்து விலகிக்கொண்டார் பாக்கியராஜ். முந்தைய தலைமுறை இயக்குனராக இருந்ததால் இப்போதைய தலைமுறை குறித்து பாக்கியராஜால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
சாந்தனுவிற்கு வந்த வாய்ப்பு:
இதனால் சாந்தனுவிற்கு வந்த சிறப்பான பட வாய்ப்பை கெடுத்தார் பாக்கியராஜ். சுப்பிரமணியப்புரம் திரைப்படத்தை சசி இயக்கியபோது அதில் நடிகர் சாந்தனுவைதான் கதாநாயகனாக நடிக்க வைக்க நினைத்தார் சசி. ஆனால் அந்த கதை பாக்கியராஜுற்கு பிடிக்கவில்லை. எனவே அவர் கடுமையாக மறுத்துவிட்டார்.

shanthanu
அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடித்தார். அந்த படம் பெரும் வெற்றியை கொடுத்தது. ஒருவேளை அந்த படத்தில் சாந்தனு நடித்திருந்தால் அது அவரது சினிமா வாழ்க்கையையே மாற்றி அமைத்திருக்கும்.
இதையும் படிங்க: இப்படியா கேப்ப? நீலிமாவிடம் ரசிகர் கேட்ட ஆபாசமான கேள்வி! எப்படி பதில் கொடுத்தார் தெரியுமா?