முந்தானை முடிச்சு படத்திற்கு பாக்யராஜ் போட்ட விநோத கண்டிஷன்… எல்லாத்துக்கும் இளையராஜாதான் காரணம்!
திரைக்கதை மன்னன் என்று பெயர் பெற்ற கே.பாக்யராஜ், தொடக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். “16 வயதினிலே”, “கிழக்கே போகும் ரயில்” போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய இவர், “சிகப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தில் வசனக்கர்த்தாவாகவும் பணியாற்றினார்.
அதனை தொடர்ந்து பாரதிராஜாவின் “புதிய வார்ப்புகள்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் “சுவரில்லா சித்திரங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார் பாக்யராஜ். அதனை தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை இயக்கிய பாக்யராஜ், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்தார்.
1983 ஆம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “முந்தானை முடிச்சு”. இத்திரைப்படத்தை பாக்யராஜ் இயக்கியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது. இத்திரைப்படம் எந்தளவுக்கு வெற்றிபெற்றது என்பதை ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் பதிவின்போது, பாக்யராஜ், ஏவிஎம் சகோதரர்களிடம் ஒரு கண்டிஷன் போட்டாராம். அதாவது “பாடல் பதிவின்போது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து யாரும் வரக்கூடாது. நான் உதவி இயக்குனராக இருந்து இயக்குனர் ஆனவன்.
இளையராஜா என்னை மதிக்கமாட்டார். நீங்கள் சொல்வதைத்தான் கேட்பார். ஆதலால் நீங்கள் வராதீர்கள்” என கூறினாராம். அதற்கு ஏவிஎம் சகோதரர்களும் ஒப்புக்கொண்டார்களாம். எனினும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாரிசு பட நடிகையை தனியறைக்கு அழைத்துச் சென்ற பிரபல நடிகர்… இவ்வளவு ஓப்பனாவா நடந்துக்குறது!!