ஸ்டுடியோ வேண்டாம் வீட்டுக்கு வர சொல்லுங்கள்... அலைக்கழித்த இளையராஜா... கடுப்பில் பாக்யராஜ் எடுத்த முடிவு...

by Akhilan |
ஸ்டுடியோ வேண்டாம் வீட்டுக்கு வர சொல்லுங்கள்... அலைக்கழித்த இளையராஜா... கடுப்பில் பாக்யராஜ் எடுத்த முடிவு...
X

ஒரு படத்திற்காக இளையராஜாவை புக் செய்ய போன பாக்யராஜை அவர் அலைகழித்த சம்பவத்தால் நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். அப்போதே இவரே இயக்கி சில படங்களில் நாயகனாக நடித்தும் வந்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான். இது நம்ம ஆளு. ஆனால் இப்படத்தின் கதை மட்டுமே பாக்யராஜ் எழுதியது. படத்தினை பாலகுமாரன் தான் இயக்கினார்.

idhu namma aalu

அப்போதைய காலத்தில் வெகுவாக பரவி இருந்த ஜாதி குறித்து இந்த படம் பேசி இருக்கும். பாக்யராஜுக்கு நாயகியாக ஷோபனா நடித்திருந்தார். இப்படத்தின் இசையமைத்து செய்தது பாக்யராஜ் தானாம். இந்த முடிவை அவர் எடுப்பதற்கு பின்னால் இருந்தவர் இளையராஜா.

முதலில் இந்த படத்திற்கு புக் செய்ய இளையராஜாவை தேடி தான் பாக்யராஜ் சென்று இருக்கிறார். ஆனால் அப்போது அங்கு அவர் இல்லை. உடனே அவரை தொடர்பு கொண்டு கேட்ட ஊழியர்கள், பாக்யராஜை வீட்டிற்கு சென்று பார்க்கும்படி சொல்லி இருக்கிறார்கள்.

ilayaraja

ஆனால் பாக்யராஜோ அது ஏன் வீட்டுக்கு செல்ல வேண்டும். இங்கே தான் பார்ப்பேன் என்றாராம். இல்ல சார் நீங்க அங்க போங்க. இப்போ அவர் வரமாட்டார் எனத் தெரிவித்துள்ளனர். இதில் கடுப்பான பாக்யராஜை தானே இந்த படத்துக்கு இசையமைத்து விடுகிறேன் என திடீர் முடிவை எடுத்தாராம். இருந்தும் இப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story