bhagyaraj, bharathiraja
bhagyaraj, bharathiraja

பாரதிராஜாவின் பிரதான சீடர்களில் ஒருவர் பாக்கியராஜ். திரைக்கதை மன்னன் என்று இன்றுவரை போற்றப்படுகிறார். இவர் தனது குருநாதரான பாரதிராஜாவை சந்தித்த அனுபவம் பற்றி இப்படி பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

கதாசிரியர் தூயவன் தான் பாக்கியராஜ் திரையுலகிற்குள் நுழைய முக்கிய காரணம். அவர் தான் எழுத்தாளரும், பாரதிராஜாவின் உதவி இயக்குனருமான பாலகுருவை பாக்கியராஜிக்கு அறிமுகம் செய்து வைத்தார். பாலகுருவிடம் பாக்கியராஜ் சான்ஸ் கேட்ட போது ‘நானே இப்ப தான் முதல் படத்துல பாரதிராஜாவோடு சேர்ந்து பணியாற்றப் போறேன். கொஞ்சம் பொறு. நான் போயிட்டு உன்னை சேர்த்துக்கறேன்’னு சொன்னாராம். அப்போ பாரதிராஜா, பாலகுரு இருவரின் கையெழுத்தும் அழகாக இருக்குமாம். பாரதிராஜாவிடம் பாலகுரு பாக்கியராஜிக்காக சான்ஸ் கேட்கும்போதெல்லாம் பாரதிராஜா சான்ஸ் கொடுத்தா சம்பளம் கொடுக்கணும்.

அதை நாமே பார்க்கலாமேன்னு சொல்லி இருக்கிறார். உடனே அவன் நம்ம பையன் சார். சம்பளம் எல்லாம் கேட்க மாட்டான். சாப்பாடு கொடுத்தா போதும். வேலை செய்வான்னு சொன்னாராம். ஒரு நாள் பாலகுருவைத் தேடி பாரதிராஜா ஆபீஸ்சுக்கு பாக்கியராஜ் சென்றுள்ளார். அங்கு இருந்தது பாரதிராஜான்னு தெரியாமல் பாலகுருவை நான் சந்திக்க முடியுமா என்பதை ‘Can I meet Balaguru sir’ னு ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். தொடர்ந்து சில ஆங்கில வார்த்தைகளில் பாக்கியராஜ் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

அப்புறம் என்ன படிச்சிருக்கேன்னு பாரதிராஜா கேட்கவும் பியுசி பெய்ல்னு சொல்லி இருக்கிறார். அப்புறம் சரின்னு படிச்சவனா இருக்குறான். இவனைப் பார்த்தா விவரமாவும் இருக்குறான்னு பாக்கியராஜை தனது அசிஸ்டண்டாக சேர்த்துக் கொண்டாராம். முதலில் ஸ்கிரிப்டைக் காப்பி பண்ற வேலையை மட்டுமே கொடுத்துள்ளார். அப்புறம் 16 வயதினிலே பட வசனத்தில் டாக்டர் பேசும் டயலாக்கில் திருத்தம் செய்து பாக்கியராஜ் தனது அபிப்ராயங்களைச் சொல்லி இருக்கிறார். அது பாரதிராஜாவுக்குப் பிடித்துப் போகவே அப்புறம் கதை, திரைக்கதை டிஸ்கஷனிலும் பாக்கியராஜ் கலந்து கொண்டாராம்.