ரஜினி நடிக்க வேண்டிய கதையில் நடித்த பாக்கியராஜ்!. கடைசி நேரத்தில் எல்லாமே மாறிப்போச்சி!..

rajini
பாரதிராஜாவிடம் உதவியாளரக இருந்து இயக்குனர் மற்றும் நடிகராக மாறியவர் பாக்கியராஜ். துவக்கம் முதலே தான் நடிக்கும் படங்களை அவரே இயக்கினார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இன்று போய் நாளை வா, அந்த ஏழு நாட்கள், தாவணி கனவுகள், முந்தானை முடிச்சி, எங்க சின்ன ராசா, சுந்தர் காண்டம்,வீட்ல விசேஷங்க உள்ளிட்ட பல திரைப்படங்களை அவர் இயக்கியு நடித்துள்ளார்.
பாக்கியராஜுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்தனர். 80,90களில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மேட்டனி ஷோ என சொல்லப்படும் மதிய காட்சிக்கு பெண்கள் படையெடுப்பது பாக்கியராஜ் படத்துக்குத்தான். அவரின் படங்கள் குறைந்தபின் மேட்டனி ஷோ -வுக்கு கூட்டமே குறைந்துபோனது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: சிவாஜிக்கு அவர் நடித்த கதாபாத்திரத்தில் மிகவும் பிடித்தது! அதை பாராட்டியது யாருனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

bhagyaraj
பாக்கியராஜ் இயக்கி நடித்து 1992ம் வருடம் வெளியான திரைப்படம் ராசுக்குட்டி. இந்த படத்தில் பாக்கியராஜுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்திருந்தார். மேலும் கல்யாண் குமார், மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். செம்புளி ஜகன் என்பவர் பாக்கியராஜின் உதவியாளராக நடித்திருப்பார். இந்த படத்தில் எல்லா காட்சியிலும் இவர் பாக்கியராஜுடன் வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஜெகன் ராசுக்குட்டி திரைப்படம் பற்றியும், பாக்கியராஜ் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியபோது ‘பஞ்சு அருணாச்சலம்தான் இந்த படத்தை தயாரித்தார். கதை, திரைக்க, வசனம், இயக்கம் பாக்கியராஜ் எனவும், ரஜினியை ஹீரோவாக நடிக்க வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரஜினியால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் நீங்களே நடித்துவிடுங்கள் என எல்லோரும் சொல்ல பாக்கியராஜே இதில் நடித்தார். ரஜினியை இயக்க பாக்கியராஜும் ஆர்வமுடன் இருந்தார். ஆனால், அது நடக்கவில்லை’ என ஜெகன் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: பாரதிராஜா பண்ண காரியத்துக்கு தக்க பதிலடி கொடுத்த சரிதா! இப்படியெல்லாம் நடந்துச்சா?