Cinema News
எல்லாத்துக்கும் பாக்கியராஜ்தான் காரணம்; அவர்தான் எங்களுக்கு தலைவலி – புலம்பும் மோகன்ராஜா
இயக்குநர் மோகன்ராஜா ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், தனி ஒருவன், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், இயக்குநர் பாக்கியராஜ் அவர்களால் தான் எங்களுக்கு பிரச்சனை என்று தெரிவித்துள்ளார். இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் ஒரு கை ஓசை, விடியும் வரை காத்திரு, தூரல் நின்னு போச்சி, பொய் சாட்சி, முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல படங்களை அவரே இயக்கி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடித்திருப்பார்.
கிட்டத்ட்ட இவரின் எல்லா படங்களும் சூப்பர் ஹிட் தான். அது மட்டுமில்லாமல், சில படங்களுக்கு இசையமைப்பாளரும் அவரே தான். அப்படி எல்லாவற்றையும் சிறப்பாக செய்யக்கூடியவர் பாக்கியராஜ். இந்நிலையில் இயக்குநரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குவதால் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்ற கேள்விக்கு, இயக்குநர் மோகன் ராஜா பதிலளிக்கையில், தமிழ் சினிமாவை பொருத்தவரை பெரும்பாலும், இயக்குநர் மட்டும் தான் எழுத்து, திரைக்கதை, வசனம், இயக்கம் என எல்லாவற்றையும் செய்வது வழக்கமாக உள்ளது.
ஆனால், ஹாலிவுட்டில் அல்லது மற்ற நாடுகளில் அப்படி இல்லை. 5,6 பேரின் உழைப்பும் அறிவும் ஒன்றாக சேர்ந்து ஒரு படம் வெளியாகும் போது, இன்னும் நன்றாக இருக்கும். அப்படி தான் ஹாலிவுட்டில் எடுக்கிறார்கள். தமிழில் அந்த வழக்கமே இல்லை என்றே கூறலாம். மேலும் இதனால் வேலைகளும் தாமதமாகும். எனக்கு தெரிந்து, தமிழ் சினிமா இப்படி இருப்பதற்கு காரணமே இயக்குநரும், நடிகருமான கே.பாக்கியராஜ் அவர்கள் தான்.
நான் இதை அவரிடமே கூறி திட்டியிருக்கிறேன். நீங்கள் அறிவாளியாக இருக்கலாம். உங்களால் ஒரே ஆளாக எல்லாவற்றையும் செய்ய முடியலாம். ஆனால் அதனால் நாங்கள் தான் கஷ்டப்படுகிறோம் என்று நான் அவரிடமே சொல்லியிருக்கிறேன். அவரிடமிருந்து தான் இந்த பழக்கமே ஆரம்பித்தது என்று நான் நினைக்கிறேன். அதற்கு முன்னர் இருந்தவர்கள் எழுத்து, திரைக்கதைர, வசனம் ஆகியவற்றிற்கு தனி ஆட்களை வைத்திருந்தார்கள். இயக்குநர் படத்தை இயக்கினால் போதும் என்று இருந்தது. ஒரு விதத்தில் இது ஒரு சாபம் தான். எல்லா வேலையையும் ஒரே ஆள் செய்யும் போது, அதில் பல சிக்கல்கள் உள்ளது என்று இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க-ரஜினியின் ஐடியாலஜி! நல்லா வொர்க் அவுட் ஆயிடுச்சு போல – ‘சந்திரமுகி 2’வில் மாஸ் காட்டிய லாரன்ஸ்