படப்பிடிப்பில் ஹீரோவை பைத்தியம் போல புலம்பவிட்ட அஜித் பட இயக்குனர்… உங்க ரவுசுக்கு ஒரு அளவே இல்லையா!!

by Arun Prasad |
Ajith
X

Ajith

“அறிந்தும் அறியாமலும்”, “பட்டியல்”, “பில்லா”, “ஆரம்பம்” ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் ஹிந்தியில் “ஷெர்ஷா” என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். “ஏகே 62” திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளார் என்று கூட பல பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் அத்தகவல்கள் வதந்தி என்று பின்னால் தெரியவந்தது.

Vishnuvardhan

Vishnuvardhan

விஷ்ணுவர்தன் இயக்கிய “பட்டியல்” திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ஆர்யா, பரத், பூஜா, பத்மபிரியா ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பரத், “பட்டியல்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

Pattiyal

Pattiyal

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஹே நம்ம மேலம் அடிடா” என்ற பாடலை இரவில் படமாக்கிக்கொண்டிருந்தபோது ஒரு காட்சியில் ஆர்யா, பரத் ஆகியோர் சியர்ஸ் செய்தபடி ஆளுக்கொரு கிளாஸில் பியர் அருந்துவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டதாம். ஆனால் அந்த பியரில் விஷ்ணுவர்தன் அவர்களுக்கே தெரியாமல் போதை ஏற்றும் பாங்கு உருண்டையை கலந்துவிட்டாராம்.

இது தெரியாமல் ஆர்யாவும், பரத்தும் குடித்திருக்கின்றனர். அதன் பின் 45 நிமிடங்கள் கழித்து இருவரும் போதையில் ஏதேதோ செய்துகொண்டிருந்தார்களாம். பரத் காற்றில் எதையோ எழுதிக்கொண்டிருந்தாராம். அதே போல் காரில் சென்றுகொண்டிருந்தபோது ஆர்யா ஃப்ளைட் ஓட்டுவது போல் பாவனை செய்துகொண்டிருந்தாராம்.

Bharath

Bharath

மேலும் பரத்திற்கு தன்னை யாரோ கொலை செய்ய வருவது போல தோன்றியதாம். ஆதலால் அவர் அழுதுகொண்டிருந்தாராம். இவ்வாறு கிட்டத்தட்ட 6 மணி நேரம் அந்த போதையில் ஏதேதோ செய்துகொண்டிருந்தார்களாம். இதனை பார்த்து படக்குழுவினர் ரசித்தார்களாம்.

இதையும் படிங்க: முந்தானை முடிச்சு படத்திற்கு பாக்யராஜ் போட்ட விநோத கண்டிஷன்… எல்லாத்துக்கும் இளையராஜாதான் காரணம்!

Next Story