வில்லி நடிகையை காதலிக்கிறாரா டாக்டர் பாரதி? விஜய் அவார்ட்ஸ் விழாவில் நடந்தது என்ன?

by ராம் சுதன் |   ( Updated:2022-04-29 06:06:11  )
arun prasad
X

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் தான். அதேபோல் இந்த சீரியல் தான் சோசியல் மீடியாவில் பயங்கரமாக டிரோல் செய்யப்படும் சீரியல் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரி நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த சீரியலில் டாக்டர் பாரதியாக நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத் வில்லி நடிகை ஒருவர் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

vj archana

அதாவது சமீபத்தில் விஜய் டிவி சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்கள் என அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

vj archana

இந்நிகழ்ச்சியில் கடந்தாண்டு சிறந்த கதாநாயகன் என்ற விருதை பாரதி கண்ணம்மா நடிகர் அருண் பிரசாத் பெற்றார். ஆனால், இந்தாண்டு அவருக்கு விருது கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த விழாவில் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து வரும் நடிகை அர்ச்சனாவிற்கு விருது கிடைத்தது.

அர்ச்சனா விருது வாங்குவதற்காக மேடை ஏறியபோது தொகுப்பாளர்கள் டாக்டர், பாரதி, டிஎன்ஏ போன்ற வார்த்தைகளை கூறி கிண்டல் செய்தனர். இதனால் அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிக்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட இருவரும் தற்போது வரை மெளனமாக இருந்து வருகிறார்கள்.

Next Story