
latest news
சூடு சொரணையே இல்லையா உனக்கு ? வெண்பாவை விரட்டி அடித்த பாரதி…
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதற்க்கு காரணம் ரசிகர்களுக்கு மிகவும்பிடித்த கியூட் வில்லி அம்மணி வெண்பா நீண்ட நாட்களுக்கு பிறகு சீரியலில் தோன்றியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் சுமார் 600 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி பிரியனுக்கு மாறாக தற்போது டிக்டாக் பிரபலம் வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். கண்ணம்மாவே மாறிட்டாங்க, இன்னும் பாரதி DNA டெஸ்ட் எடுக்கல என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரசவ காலத்திற்கு பிறகு மீண்டும் சீரியலுக்கு திரும்பியுள்ள வெண்பாவை வைத்து தான் கடந்த சில பிரோமக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. காரணம் , கடந்த சில நாட்களாக விறுவிறுப்பு இல்லாமல் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா, வெண்பா வந்த பின் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. எனவே, ரசிகர்களை கவர வெண்பாவை வைத்தே ப்ரோமோவை வெளியிட்டுள்ளது பாரதி கண்ணம்மா டீம்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோவில் பாரதி, வெண்பாவை வெக்கம், மானம், சூடு, சொரணை எதுமே இல்லையா என கேட்க, அது எங்க இவ கிட்ட இருக்கு என கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.