Connect with us
bharathi raja

Cinema History

பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு நோயா?!.. அதிர்ச்சியில் நண்பர்கள்.. உறைந்து போன திரையுலகம்!..

தமிழ் சினிமாவில் மண்வாசனை மிக்க திரைப்படங்களை கொடுத்தவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். ஸ்டுடியோவில் மட்டுமே இயங்கி வந்த தமிழ் சினிமாவை வயல்வெளிக்கு பக்கம் அழைத்து சென்றவர் இவர்தான். இவர்தான் நிஜ கிராமத்து மனிதர்களின் உணர்வுகளை திரையில் பிரதிபலித்தார். கிழக்கே போகும் ரயில், மண் வாசனை, கருத்தம்மா, கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை உள்ளிட பல மறக்க முடியாத திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த பல வருடங்களில் அவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தற்போது அவர் திரைப்படங்களை இயக்குவதில்லை. அதேநேரம் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். குணச்சித்திர வேடங்களில் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி வருகிறார். தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் கூட முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இப்போது அவருக்கு 82 வயது ஆகிறது. கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் குணமடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதேநேரம் அவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

Bharathiraja

Bharathiraja

சில நாட்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து அவரின் சில நண்பர்கள் அவரை சந்திக்க ஆசைப்பட்டார்களாம். அவர்களிடம் தொலைப்பேசியில் பேசிய பாரதிராஜா ஒரு தேதியை சொல்லி தேனிக்கு வந்து விடுங்கள். அங்கே சந்திப்போம் என சொல்ல அவர்கள் சொன்ன தேதியில் அங்கு செல்ல அவர்களுக்காக உணவு, தங்குமிடம் என எல்லாவற்றையும் பாரதிராஜா தயார் செய்து வைத்திருந்தாராம். அவர்களும் சாப்பிட்டுவிட்டு பாரதிராஜாவுக்காக காத்திருக்க பாரதிராஜா அங்கு செல்லவில்லை. ஏனெனில், தேனிக்கு செல்ல வேண்டும் என்பதையே மறந்துவிட்டாராம். எனவே, அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டனர்.

விரைவில் பாரதிராஜா எல்லாவற்றிலிருந்தும் மீண்டும் வருவார் என நம்புவோம்!..

இதையும் படிங்க: இதுவரை நடிக்காத கேரக்டர்! ‘கேப்டன் மில்லர்’ ட்ரெய்லரே இன்னும் ஒய்ந்தபாடில்லை – தனுஷ் கொடுத்த ஷாக்

google news
Continue Reading

More in Cinema History

To Top