யோவ் ரஜினி நீ அந்த கதையில நடிச்சாலும் படம் ஹிட்டாகும்... கடுப்பில் கமெண்ட் அடித்த பாரதிராஜா..

கர்நாடகாவில் பேருந்து ஓட்டுனராக இருந்து சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்தவர் சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த். சென்னையில் நடிப்பு கல்லூரியில் படித்து நடிப்பு பயிற்சி எடுத்தார். அதன்பின் பாலச்சந்தர் கன்ணில் பாட்டு அவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக மாறினார். துவக்கமே கமலுடன் நடித்ததால் தொடர்ந்து பல படங்களில் கமலுக்கு நண்பராகவும், வில்லனாகவும் நடித்தார்.

rajini1
பைரைவி படம் மூலம் ஹீரோவாக மாறி முன்னணி நடிகராகவும் மாறினார். அதன்பின் பல ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்து சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். ஒருகட்டத்தில் ரஜினி நடித்து வெளியான அனைத்து படங்களும் வசூலில் சக்கை போடு போட்டது.
இதையும் படிங்க: எங்க போனாலும் விரட்டுராங்க! ஒரேடியா துண்ட போட்டு உட்கார்ந்த தனுஷ்! டி50 படத்திற்காக இப்படி ஒரு முடிவா?
கிராமம் வரை இவரின் படங்கள் ரீச் ஆனது. எனவே, ரஜினியை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் ஆசைப்பட்டனர். பல இயக்குனர்கள் ரஜினிக்கு கதை எழுதி அவருக்காக காத்திருந்தனர். ஒருபக்கம், ரஜினியுடன் ஜோடி போட்டு நடிக்க அப்போதிருந்த நடிகைகளும் ஆசைப்பட்டனர்.
90களில் ரஜினி முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருந்தார். அவரின் கால்ஷீட் கிடைப்பதே குதிரை கொம்பாக இருந்தது. ரஜினியை வைத்து 16 வயதினிலே படம் எடுத்தவர் பாரதிராஜா. அந்த படத்தில் ரஜினிக்கு 3 ஆயிரம் சம்பளம் பேசி இரண்டாயிரத்து ஐநூறு மட்டும் கொடுத்தது தனிக்கதை. பாரதிராஜாவுக்கு சில படங்கள் மட்டுமே ஹிட் அடித்தது. ஆனால், பல படங்கள் தோல்வியை தழுவியது.
ரஜினி படங்கள் ஹிட் அடிப்பதை பார்த்த பாரதிராஜா ரஜினியை ஒருமுறை சந்தித்த போது ‘உனக்கு மச்சம்யா... பாட்டி வட சுட்ட கதையில நடிச்சாலும் அந்த படம் ஹிட் ஆகுது’ என நக்கலடித்தாராம்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை டென்சன் செய்த விஜய்!.. அப்ப ஸ்டார்ட் ஆச்சி!.. இப்ப வொர்க் அவுட் ஆகுமா?!..