200 ரூபாயால் பறிபோன வாய்ப்பு; மைசூர் காதல்... பாரதிராஜா சீக்ரெட்ஸ்!

by Akhilan |   ( Updated:2022-10-03 06:19:42  )
200 ரூபாயால் பறிபோன வாய்ப்பு; மைசூர் காதல்... பாரதிராஜா சீக்ரெட்ஸ்!
X

இயக்குநர் இமயம் பாரதிராஜா, தனது படங்களின் ஷூட்டிங்கை மைசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி நடத்துவதுண்டு. அதற்குப் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான கதை தெரியுமா..

இயக்குநர் பாரதிராஜா 16 வயதினிலே படம் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். இயக்குநராவதற்கு முன்பு கிட்டத்தட்ட 13 வருடங்கள் பல்வேறு இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அவர்களில் முக்கியமானவர் கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகல். கன்னட கே.பாலச்சந்தர் என்ற அளவுக்குப் புகழப்படும் புட்டண்ணா, ஏ.வி.எம்.ராஜன் - வாணிஸ்ரீயை வைத்து இருளும் ஒளியும் என்கிற தமிழ் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் பாரதிராஜா உதவி இயக்குநராகச் சேர்ந்தார்.

பாரதிராஜா

தற்போது பார்சன் காம்ப்ளக்ஸ் என்றழைக்கப்படும் இடத்தில் அப்போது ஜெமினி ஸ்டூடியோ இருந்தது. இருளும் ஒளியும் படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்த பாரதிராஜா முதல்முறையாக ஜெமினி ஸ்டூடியோவில்தான் கிளாப் அடித்திருக்கிறார். அதே இடத்தில் இப்போது மனோஜ் கிரியேஷன்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தைக் கட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இருளும் ஒளியும் படத்தின் ஷூட்டிங் ஜெமினி ஸ்டூடியோவில் நடந்து, பின்னர் அதன் வெளிப்புற படப்பிடிப்பு ஊட்டியில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: தேசிய விருதை தட்டிக்கழித்த பாரதிராஜா!…தலைநகரில் அதிகாரிகளின் முன் முரண்டு பிடித்த சம்பவம்!…

அந்தப் படத்தில் அசோசியேட்டாக வேலைபார்த்த நாயுடு என்பவர், 200 ரூபாய் கொடுத்தால்தான் உன்னை வெளிப்புற படப்பிடிப்புக்குக் கூட்டிக்கொண்டு போவேன் என்று பாரதிராஜாவிடம் சொல்லியிருக்கிறார். அப்போது பாரதிராஜாவிடம் 2 ரூபாய் மட்டும்தான் இருந்திருக்கிறது. பொருளாதாரரீதியாக கஷ்டத்தில் இருந்த பாரதிராஜாவால் 200 ரூபாய் கொடுக்க முடியவில்லை.

இதனால், அவரை சென்னையிலேயே விட்டுவிட்டு ஊட்டிக்குப் படக்குழு சென்றிருக்கிறது. இந்தத் தகவல் தெரிந்ததும் நாயுடுவை புட்டண்ணா கடிந்துகொண்டாராம். பின்னாட்களில் இயக்குநர் புட்டண்ணாவுடன் நெருக்கமானதும், தன்னுடைய உதவி இயக்குநரான பாரதிராஜாவைத் தனது பியட் காரிலேயே ஜெமினி ஸ்டூடியோவுக்குக் கூட்டிப்போன சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

Next Story