தியேட்டரில் கண்டபடி திட்டிய ரசிகர்கள்…கண்ணீர் விட்டு கதறிய பாரதிராஜா….40 வருட ரகசியம் இதோ…

Published on: August 28, 2022
இயக்குனர்
---Advertisement---

தமிழில் மண்வாசனை மிக்க திரைப்படங்களை இயக்கியவர் பாரதிராஜா. இவர் இயக்கிய 16 வயதினிலே, மண் வாசனை, கடலோர கவிதைகள், கருத்தம்மா, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே ஆகிய படங்கள் காலத்தையும் தாண்டி பேசப்படும் திரைப்படங்காளாக இருக்கிறது. கிராம படங்களை எடுப்பதில் பலருக்கும் முன்னோடியாக இருந்தவர். அரங்குக்குள் மட்டும் எடுக்கப்பட்டு வந்த சினிமா படப்பிடிப்பை கிராமத்திற்கும், வயல் வெளிக்கும் அழைத்து சென்றவர். பல நடிகர்,நடிகைகளை அறிமுகம் செய்துள்ளார்.

bharathi

ஆனால், இவர் ரசிகர்களிடம் திட்டி வாங்கி அழுத சம்பவம் நடந்தது என்று சொன்னால் நம்புவீர்களா?.. ஆனால், உண்மையில் அப்படி ஒரு சம்பவம் அவர் வாழ்வில் நடந்தது.

பாரதிராஜா இயக்கத்தில் 1982ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல் ஓவியம். இப்படத்தில் கண்ணன் என்கிற புதுமுக நடிகரையும், நடிகை ராதாவையும் நடிக்க வைத்தார். கண் தெரியாத பாடகரை ராதா காதலிப்பது போலவும், அதன்பின் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்வது போலவும் கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் இனிமையான பாடல்களை கொடுத்திருந்தார் இசைஞானி இளையராஜா. அனைத்து பாடல்களையும் உருகி பாடியிருப்பார். எஸ்.பி.பி.

kadhal oviyam

ஆனால், இப்படம் ஏனோ ரசிகர்களை கவரவில்லை. தனது படங்கள் ரிலீஸ் ஆகும் போது ரசிகர்களுடன் திரையரங்குகளில் படம் பார்ப்பது பாரதிராஜாவின் வழக்கம். காதல் ஓவியம் படத்தை அப்படி அவர் பார்த்த போது இவருக்கு முன் அமர்ந்திருந்த ரசிகர்கள் பாரதிராஜாவை கண்டபடி திட்டினராம். அதுவும் அவரின் முகத்திற்கு நேர் எதிராக. இதனால் மனமுடைந்து அவர் கதறி அழுதாராம். அதன்பின் பல வருடங்கள் ஆகியும் அவர் அவரின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அவர் தியேட்டர் பக்கமே செல்வதில்லையாம். இப்படி 40 வருடங்கள் ஆகிவிட்டது.

bharathi raja

ஆனால், தனுஷுடன் அவர் நடித்து சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் அவரின் வேடம் பலராலும் சிலாகிக்கப்பட, 40 வருடங்களுக்கு பின் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துள்ளார் பாரதிராஜா. இந்த முறை ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் பாரதிராஜா ஆனந்த கண்ணீர் வடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாரதிராஜா உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைந்து திரும்ப வேண்டுமென திரையுலகினரும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.