4 நடிகர்கள் ரிஜெக்ட் பண்ணிய கதை!.. துணிந்து நடித்த கமல்!.. அதிலும் அந்த கடைசி ஷாட்!…

#image_title
நான்கு வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். சினிமாவில் புதிய முயற்சிகளை செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் உடையவர். அதனால்தான் 80களில் திரைப்படங்களில் பல பரிசோதனை மற்றும் புதிய முயற்சிகளை செய்து பார்க்க விரும்பிய இயக்குனர்கள் அந்த கதையில் நடிக்க கமலை தேர்ந்தெடுத்தார்கள்.
பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள், பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, ருத்ரையாவின் அவள் அப்படித்தான் போன்ற படங்கள் கமலால் மட்டுமே சாத்தியமானது. ஏனெனில், அப்போது இருந்த ஹீரோக்கள் கமர்ஷியல் படங்களில் நடிப்பதையே விரும்பினார்கள். தேவையில்லாத ரிஸ்க் எதற்கு?. இந்த படம் ஓடவில்லை எனில் தயாரிப்பாளர்கள் நம்மை தேடி வரமாட்டார்கள். நமக்கு மார்க்கெட் போய்விடும் என பயந்தார்கள்.
ஆனால், கமல் இதற்கு நேர்மாறானவர். தனது,மார்க்கெட்டை தக்க வைக்க கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்தாலும் இடையிடையே புதிய மற்றும் பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்து கொண்டே இருந்தார். அதனால்தான் ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், நாயகன், குணா, மகாநநதி, ஹேராம், அன்பே சிவம் போன்ற படங்கள் வெளிவந்தது.

இதில் சில படங்கள் தோல்விகளை கண்டிருந்தாலும் கமல் தனது முயற்சிகளை விடவில்லை. இப்போதும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா ஊடகம் ஒன்றில் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். நான் சிகப்பு ரோஜக்கள் கதையை 4 நடிகர்களிடம் போய் சொன்னேன். நெகட்டிவாக இருக்கிறதே. இது வில்லன் கதாபாத்திரம்.. நான் நடிக்க மாட்டேன். என சொல்லிவிட்டார்கள்.
ஆனால், கதையை கேட்டதும் கமல் நடிக்க ஒப்புகொண்டார். படத்தின் இறுதிக்காட்சியில் அவரின் கண்ணுக்கு ஒரு குளோசப் ஷாட் வைத்திருப்பேன். ஜும் செய்து கொண்டே அவரின் கண்ணுக்கு கேமரா போகும். அப்போது சரியான நேரத்தில் கண்ணிலிருந்து கண்ணீர் வர வேண்டு. அப்போதுதான் அந்த கதாபாத்திரம் மீது அனுதாபம் வரும் என சொன்னேன். கமல் கச்சிதமாக அதை செய்து காட்டினார்.
கமல் ஒரு ஆகச்சிறந்த கலைஞன்’ என பாராட்டி பேசினார் பாரதிராஜா.