Cinema History
என்னை கமலுடன் நடிக்கவிடாமல் தடுத்தார் பாரதிராஜா!.. காமெடி நடிகருக்கு ஏற்பட்ட சோகம்!..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் தியாகு. ஒரு தலை ராகம் படத்திலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர். பாலைவன சோலை திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. பல திரைப்படங்களில் கதாநாயகர்களின் நண்பனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். அதேபோல், பல படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார். பல திரைப்படங்களில் அரசியல்வாதியாகவும், ஜாதி சங்க தலைவராகவும் நடித்திருப்பார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘காதலா காதலா படத்தில் டெல்லி கணேஷ் நடிக்க வேண்டிய வேடம் முதலில் எனக்குதான் வந்தது. கமலுடன் நடிக்க மிகவும் ஆவலாக இருந்தேன். படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் எனக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துவிட்டார். அடுத்தநாள் ஏவிஎம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு. ஆனால், இயக்குனர் செல்வமணியும், பாரதிராஜாவும் என்னை அழைத்து அந்த படத்தில் நடிக்க கூடாது என சொல்லிவிட்டனர். கமல் ஒரு மகா கலைஞன். எப்பேர்ப்பட்ட நடிகர். இதை அவரிடம் நேரில் சென்று சொல்லிவிட்டு வருகிறேன் என அவர்களிடம் சொன்னேன். ஆனால், பாரதிராஜா ‘நீ அங்கே போகவே வேண்டாம்’ என சொன்னார்.
ஆனால், நான் அதையும் மீறி அங்கு சென்று கமலிடம் இதை சொன்னேன். உடனே ‘பேக்கப்’ என சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். அதன்பின் எனக்கு பதில் டெல்லி கணேஷ் நடித்தார்’ என தியாகு கூறியிருந்தார்.
காதலா காதலா படம் எடுக்கப்பட்ட போது திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கும், இயக்குனர் சங்கத்திற்கும் இடையே அப்போது பிரச்சனை வந்தது. கமல்ஹாசன் தொழிலாளர்கள் பக்கம் நின்றார். இதில் ஏற்பட்ட பிரச்சனையில்தான் கமல் படத்தில் நடிக்க கூடாது என தியாகுவுக்கு பாரதிராஜா உத்தரவு போட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஷர்மிலி உனக்கு மனசாட்சி இருக்கா?!.. கவுண்டமணி பத்தி நீ பேசலமா!. சீறும் பயில்வான் ரங்கநாதன்…